பக்கம் எண் :

271

வினைமுதலான் நிகழ்த்தப்படும் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதத்தினுடைய பகுதிகளாம் என்றவாறு.

இயல்பு-உயிரும் ஒற்றும் குற்றுகரமும் ஆகிய இருபத்துமூன்று ஈற்றவாகிப் படுத்தல் ஓசையான் அச்செய்கை மேல் பெயர்த்தன்மைப்பட்டு வினைமாத்திரையே உணர்த்தி நிற்கும் தன்மை.

குற்றுகரத்தை வேறு பிரித்ததனால் போக்குபாய்ச்சு ஊட்டு நடத்து எழுப்பு தீற்று இத்தொடக்கத்த வாய்பாட்டான் வருவனவும் கொள்க.

ஏவல் வினைமுதல் தெரிநிலை வினையின்-மேவரு பகுதி, என வரும் சூத்திரத்துள் பெறப்படுதலின், ஈண்டு இயற்றும் வினைமுதல் தெரிநிலை வினையின் பகுதியே கூறிற்று என்பது பெற்றாம். இவ்வாறு நின்ற முதல் நிலைகளை வடநூலார் தாது என்ப.

இவற்றால் பகுபதம் வருமாறு-நடந்தான் வந்தான் மடிந்தான் சீத்தான் விட்டான் கூவினான் வெந்தான் வைத்தான் நொந்தான் போயினான் வௌவினான் எனவும், உரிஞினான் உண்டான் பொருதினான் திருமினான் தின்றான் தேய்த்தான் பார்த்தான் சென்றான் வவ்வினான் வாழ்ந்தான் கேட்டான் எனவும்,

அஃகினான் போக்கினான் பாய்ச்சினான் ஊட்டினான் நடத்தினான் எழுப்பினான் தீற்றினான் எனவும் வரும். பிறவும் அன்ன.

விளக்கம்: பின்னைய மூன்று-சாரியை சந்தி விகாரம்

அரசன்கோயிலைக் கட்டினான்-ஏவும் வினைமுதல்.

தச்சன் கோயிலைக் கட்டினான்-இயற்றும் வினைமுதல்

இவ்வியல்பு என்றது-இவ்விருபத்துமூன்று ஈற்றுச் சொல்லும், பெயர் பகுதியில் பொருள் சிறவாது ஆதலின்