272 படுத்தல் ஓசை உடையவாய்த் தம்மால் நிகழ்த்தப்படும் வினைகளைச் சுட்டி நிற்கும் வினைப்பகுதிகளாகிய முதல்நிலைத் தொழிற்பெயர்களின் இயல்பு. வடநூலார் வினை முதல்நிலையைத் தாது என்பர். தன்வினை பிறவினை ஆயகாலத்துக் குற்றியலுகர ஈறு ஆறனுள் ஓரீற்றது ஆதலும் கூடும். | தன்வினை | பிறவினை | | தன்வினை | பிறவினை | | போ | -போக்கு | | | நட | -நடத்து | | பாய் | -பாய்ச்சு | | | எழு | -எழுப்பு | | உண் | -ஊட்டு | | | தின் | -தீற்று |
தாய் மகவுக்கு உணவை ஊட்டினாள் என்புழி, ஊட்டுதல் தொழிலை இயற்றியவள் தாய் ஆதலின், ஊட்டினாள் என்பது இயற்றும்வினை ஆதல் காண்க. அஃகு-தக்வினைக் குற்றுகர ஈறு. தீற்றுமுதலியன-பிறவினைக்குற்றுகர ஈறு. ‘குற்றுகரத்தை வேறு பிரித்து ஓதிய அதனால், போக்கு பாய்ச்சு உருட்டு நடத்து எழுப்பு தீற்று என்றல் தொடக்கத்து வாய்பாட்டான் வருவனவும் கொள்க’ என்பது மயிலைநாதர் உரை. நன். 136 இவ்வீற்றுப் பகுதிகளை எல்லாம் ‘செய் என் ஏவல் வினைப் பகுதி’ என்றார் மயிலைநாதர். ‘இவை செய் என்னும் ஏவல்வினையின் பகுதிகளும் ஏனைய வினைகளின் பகுதியும் ஆம்’ என்றார் நன்னூல் விருத்திகாரர்; ‘செய்யென் வினைப்பகுதி என்ற துணையானே செய் என் ஏவல்பகுதியும் அடங்காதோ, வேறு கூறவேண்டியது என்னை எனின், நட வா உண் தின் என்னும் தொடக்கத்து முதனிலைகளே விகுதியொடு புணராது தனித்துநின்று ஓசை வேறுபாட்டான் முன்னிலை ஏவல் ஒருமை எதிர்கால வினைமுற்றுப் பொருண்மை உணர்த்தினவோ, விகுதியொடு புணர்ந்து நின்றே அப் பொருண்மை உணர்த்தினவோ என் ஐயுறுவார்க்கு |