பக்கம் எண் :

522

ஒன்பான்+நூறு-தொன்பான்+நூறு, தொள்ள்பான்+நூறு. தொள்ள்+ஊறு, தொள்ள்+ஆ+று, தொள்ள+ஆயிர+று, தொள்ள் + ஆயிர + ம் - தொள்ளாயிரம் எனவும் புணர்ச்சிவிதி கூறியது அவ்வளவு பொருத்தமாக இன்மையின் இவர் தொண்ணூறு. தொள்ளாயிரம் என்ற முடிபினை எளியதொரு முறையாற் கொண்டார்.

நூறு என்பதனை நெருங்கிய பத்துத் ‘தொடுநூறு’ ஆகித் தொண்ணூறு ஆயிற்று எனவும், ஆயிரம் என்பதனை நெருங்கிய நூறு ‘தொடு ஆயிரம்’ ஆகித் தொள்ளாயிரம் ஆயிற்று எனவும் கூறுப. இங்ஙனமே பத்தினை நெருங்கிய எண்ணாகிய ஒன்பானைத் தொடு என்பதன் திரிபு ஆகிய தொண்டு என்ப.

இவ்வாசிரியர் ‘யான்யாம் நீநீர் என்எம் நின்நும்’ எனத் திரிந்தன எனச் சுருக்கமாகச் கூறியதனைத் தொல்காப்பியனார், ‘ஆஎ ஆகும் யாம் என் இறுதி, ஆவயின் யகரமெய் கெடுதல் வேண்டும்’ (188) என யாம் ‘எம்’ எனத் திரிந்தமைக்கும்.

‘நீஎன் ஒருபெயர் நெடுமுதல் குறுகும்
ஆவயின் னகரம் ஒற்றா கும்மே’           தொல். 179

என நீ ‘நின்’ திரிந்தமைக்கும் விளக்கம் தருவன போல்வன கொள்க.

நன்னூலார் வருமொழியாகிய பத்து என்பதனை நூறாகவும் நூறு என்பதனை ஆயிரமாகவும் திரிக்க என்றதனால், வருமொழி நூற்றுடன் புணரும் நிலைமொழி என்பது கூடத் தொண்ணூறு என்றாகியவழி, தொள்ளாயிரம் எனப் பொருள்படும்; வருமொழி ஆயிரத்தொடும் புணரும் நிலைமொழி ஒன்பது கூடத் தொள்ளாயிரம் என்றாகியவழி, ஒன்பதினாயிரம் எனப் பொருள்படும் என்று கூறி இவ்வாசிரியர் நன்னூலார் கருத்தை மறுத்துள்ளார்.