பக்கம் எண் :

523

“ஒன்பது-ஒன்று ஊனமான, பத்து, அஃது அக்காலச் சொல். எட்டாற் பெருக்கின பத்து எண்பதானாற் போல, ஒன்றூனப்பத்தால் பெருக்கின பத்தும் நூறும், தொண்ணூறும் தொள்ளாயிரமும் ஆம் என்க. ‘நெறி’ என்றதனால், ஒற்று இரட்டாது தொளாயிரம் எனவும் கொள்க” என்பது மயிலைநாதர் உரை. (நன். 193)

‘நிலைமொழி ஆகிய எட்டின் மேல் ஒன்று ஒன்பஃது எனப் பஃது என்னும் இறுதியாய்த் திரிந்து நின்றாற் போல வருமொழி ஆகிய எண்பதின்மேல் பத்தை நூறு எனவும், எண்ணூற்றின்மேல் நூற்றை ஆயிரம் எனவும் திரித்துப் பொருள் கோடலும் ஒன்று. இவற்றை இலக்கண முடிபாகத் தொல்லாசிரியர் முடித்தவாறே முடித்தாம் என்பார் ‘நெறியே’ என்று கூறினார்” என்பது நன்னூல் விருத்தியுரை. (194)

ஒத்த நூற்பாக்கள்:

‘ஒன்பான் ஒகரமிசை.........றகரம் ஆகும்.’           தொல். 445

‘ஒன்பான் முதனிலை.......மகரம் ஒற்றும்.’           தொல். 463

‘ஒன்பானொடு பத்தும்..........நெறியே.’           நன். 194           மு. வீ. பு. 284

‘ஒன்பா னொடுபத்து நூறதனை ஓதுங்கால்
முன்பாந் தகரணள முன்பிரட்டும்-பின்பான
எல்லாம்கெட்டு ஆறிரண் டாவியின்பின் வல்லுகரம்
நல்லா யிரமீறாய் நாட்டு.’           நே. 21

‘பத்து’ எனும் வருமொழியின் முடிபு

113. ஒன்றுமுதல் எட்டுஈற்று எண்முனர்ப் பத்தின்
இடைஒற்று ஏகல் ஆய்தம் ஆகல்
எனஇரு விதியும் ஏற்கும் என்ப.

இது வருமொழி ஒன்றின் செய்தி கூறுகின்றது.