531 ஒன்பதிற்றுக்கோடி முதலியன ‘சாரியை மரபே’ (470) என்ற மிகையானும், ஒன்பதினாயிரம் என்பது ‘ஒன்பான் இறுதி’ உருவுநிலை திரியாது இன்றெல் வேண்டும் சாரியை மரபே’ தொல். 470 என்ற நூற்பாவானும் பெறப்பட்டனவாக நச்சினார்க்கினியர் உரைத்தனவற்றை இவ்வாசிரியர் ஏற்றபெற்றி எடுத்தாண்டுள்ளார். பத்தொன்பது என்பது சாரியை பெறவில்லை. பத்துக்கழஞ்சு என்புழிக் ககரஒற்று ‘இயல்பினும் விதியினும் (82) என்பதனால் இடையே மிகுந்தது; ‘வன்றொடர் அல்லன’ (100) என்ற குற்றியலுகரப் பொது நூற்பாவானும் மிக்கது எனலாம். பதினொன்று-உம்மைத்தொகை, பதிற்றொன்று - பண்புத்தொகை, பிற எண்ணுப்பெயர்களும் அன்ன. “பத்துக்கோடி ஒன்பதுகோடி என இந்நிலைமொழிகள் தம் இயல்பில் நிற்றலே அன்றி, வழக்கின் கண்ணும் சான்றோர் செய்யுட்கண்ணும் இவ்வாறு அமைந்து கிடந்தனவும் கொள்க என்பார் ‘ஏற்பது ஏற்கும்’ எனவும், ஒன்பதன் ஈற்று உயிர்மெய்யைக் கெடாது குற்றுகர ஈற்றுப் பொதுவிதியான் உயிர் ஒன்றுமே கெட இன்னும் இற்றும் ஏற்பது ஏற்று நிற்றலின் ‘ஒன்பதும் இற்றே’ எனத் தன்மைஅணி ஆக்காது, உவமைஅணி ஆக்கி ‘இணைத்தே’ என்றும் கூறினார், ஒன்பது என்பதன் இறுதி பத்து என்பது போல முரணி நிற்றலான் அதனொடு இதனை மாட்டெறியப்பட்டது எனினும் அமையும்” என்பது நன்னூல் விருத்தியுரை. 197 |