பக்கம் எண் :

530

‘அளவாகு மொழிமுதல் நிலைஇய உயிர்மிசை
னஃகான் றஃகான் ஆகிய நிலைத்தே’           தொல். 121

என்ற நூற்பாவின் ‘நிலைஇய’ என்ற மிகையானும்.

‘முற்றஇன் வரூஉம் இரண்டலங் கடையே’ (433)

என்பதன்கண் உள்ள ‘முற்ற’ மிகையானும்.

அளவுப் பெயர் பதின்கலம் என்றாற்போலப் புணர்தல்

‘நிறையும் அளவும்’ (436) என்ற நூற்பாவானும், பதிற்றுக்கலம் என இற்றுப் பெறுதல் அந்நூற்பாவின் ‘குறையாதாகும்’ என்ற மிகையானும்,

பொருட்பெயரும் பதின்திங்கள் பதிற்றுத் திங்கள் பதிற்றுவேலி முதலியன அக் ‘குறையாதாகும்’ (436) என்ற மிகையானும்,

ஒருபதினாயிரம் என்பது

‘ஆயிரம் வரினே இன்என் சாரியை
ஆவயின் ஒற்றுஇடை மிகுதல் இல்லை’           தொல். 476

என்ற நூற்பாவானும்,

ஒருபதின்கழஞ்சு என்பது

‘அளவும் நிறையும் ஆயியல் திரியா’           தொல். 477

என்ற நூற்பாவானும்.

ஒருபதிற்றுக்கலம் முதலியன அந்நூற்பாவின் ‘திரியா’ என்ற மிகையானும்,

ஒன்பதின்கோடி முதலியன

‘ஒன்பான் இறுதி உருவுநிலை திரியாது
இன்பெறல் வேண்டும் சாரியை மொழியே’           தொல். 459

என்ற நூற்பாவானும்,