பக்கம் எண் :

529

இரண்டு பத்து என்பதனோடு புணருங்கால் அத்தொடர் பன்னிரண்டு என முடிதல் 116ஆம் நூற்பாவில் கூறப்படும். எண்ணுப்பெயர் பதினொன்று முதலிய எட்டும் இன்சாரியை பெற்றும் புணர்தல்

‘ஒன்று முதலாக எட்டன் இறுதி
எல்லா எண்ணும் பத்தன் முன்வரின்
குற்றியல் உகரம் மெய்யொடுங் கெடுமே
முற்ற இன் வரூஉம் இரண்டலங் கடையே’           தொல். 453

என்ற நூற்பாவானும்,

திபற்றொன்று முதலிய எட்டும் இற்றுங் சாரியை பெற்றுப் புணர்தல்

‘நிறையும் அளவும் வரூஉம் காலையும்
குறையாது ஆகும் இன்என் சாரியை’           தொல்: 436

என்ற நூற்பாவின்’குறையாதாகும்’ என்ற மிகையானும்

பதினாயிரப் என ஈறுகெட்டு இன்பெற்று முடிதல்

‘ஆயிரம் வரினும் ஆயியல் திரியாது’           தொல். 435

என்ற நூற்பாவானும்,

பதிற்றொன்பது பதிற்றுப்பத்து என ஈறு கெட்டு இன்பெறுதல் 436ஆம் நூற்பாவின் ‘குறையாதாகும்’ என்ற மிகையானும், நிறைப்பெயர் பதின்கழஞ்சு என்றாற்போல இன் பெறுதல்

‘நிறையும் அளவும்’           (தொல். 436)

என்ற நூற்பாவானும்,

பதிற்றுக்கழஞ்சு பதிற்றெடை என்றாற்போல இற்றுப் பெறுதல்