528 பதிற்றுவேலி-யாண்டு - முழம்-அடுக்கு -இதழ் - என ஈறுகெட்டு இற்றுப் பெற்றும் தனக்கு ஏற்றபெற்றி முடிந்தவாறு காண்க. ஒருபதினாயிரம் ஒருபதின்கழஞ்சு ஒருபதிற்றுக்கலம் ஒருபதிற்றுவேலி என அடை அடுத்து வருமாறும் காண்க. ஒன்பதின்கோடி ஒன்பதிற்றுக்கோடி - கழஞ்சு - துலாம் என ஈறுகெடாது இன்னும் இற்றும் பெற்றும். ஒன்பதினாயிரம் எனஇன் பெற்றும், ஒன்பதிற்றொன்று-எடை-அகல்-உழக்கு-தடக்கை மவலி-யாண்டு-எழுத்து-என இற்றுப் பெற்றும் ஒன்பதும் தனக்கு ஏற்ற பெற்றி முடித்தவாறு காண்க. ‘ஏற்புழி’ என்பதனானே பத்தொன்பது - கழஞ்சு - சாடி - இதழ் - எனச் சாரியை பெறாலு குற்றுகரஈற்றுப் பொதுவிதியானே முடிதலும் கொள்க. பிறவும் அன்ன. விளக்கம் சில எண்ணுப்பெயர்-பத்து, ஒன்பது என்பன. எண்ஆதி நாற்பெயர்-எண் நிறைஅளவு பொருள் பற்றியபெயர், ‘ஒருபுடைச் சேறல்’- ஒன்றற்குக் கூறிய விதியின் ஒரு பகுதியே பிறிது ஒன்றற்குப் பொருந்துதல். ‘மெய்ஈறு எல்லாம் புள்ளியொடு நிலையல்’ தொல். 104 ‘குற்றியல் உகரமும் அற்றுஎன, மொழிப’ (தொல். 105) என்ற நூற்பா உரையுள், ‘இம் மாட்டேறு ஒரு புடைச்சேறல், புள்ளி பெறாமையின்’ என நச்சினார்க்கினியர் உரைத்தமை காண்க. |