பக்கம் எண் :

527

இ-ள் : ஒன்று முதலிய பத்தும் ஆயிரமும் கோடியுங் ஆகிய எண்ணுப்பெயரும் நிறைப்பெயரும் அளவுப் பெயரும் பொருட்பெயரும் வருமொழியாய் வந்து புணரின், பத்தினது ஈற்று உயிர்மெய்யைக் கெடுத்து இன் ஆதல் இற்று ஆதல் ஆண்டைக்கு ஏற்பது ஒன்று வரும். ஒன்பதன்முன் இவை வந்தாலும் இவை இரண்டனுள் ஒன்று ஆண்டை வரும் என்றவாறு.

‘ஒருபுடைச் சேறல்’ என்னும் உத்தியான், ஒன்பது ஈறுகெடாது சாரியை பெறுதலே கொள்க.

‘இரண்டு முன்வரின்’ (116) என மேல் முடித்தலின், ஈண்டு ஏனையவே வருவிக்க.

எண்ணுப்பெயர் வந்துழிப் பதினொன்று - மூன்று - நான்கு-ஐந்து-ஆறு-ஏழ்- எட்டு -கோடி- என ஈறுகெட்டு இன்னும் இற்றும் பெற்றும்,

பதினாயிரம் என ஈறுகெட்டு இன் பெற்றும்,

பதிற்றொன்பது பதிற்றுப்பத்து என ஈறுகெட்டு இற்றுப் பெற்றும், நிறைப்பெயர் வந்துழிப் பதின்கழஞ்ஈ பதிற்றுக் கழஞ்சு-சீரகம்-தொடி-பலம்-மஞ்சாடி-என ஈறு கெட்டு இன்னும் இற்றும் பெற்றும்,

பதிற்றெடை என ஈறுகெட்டு இற்றுப் பெற்றும்,

அளவுப்பெயர் வந்துழிப் பதின்கலம் பதிற்றுக்கலம்-சாடி-தூதை - பானை - நாழி-மண்டை - வட்டி - என ஈறு கெட்டு இன்னும் இற்றும் பெற்றும்.

பதிற்றுக்கலம் - ஆழாக்கு-உழக்கு-என ஈறுகெட்டு இற்றுப் பெற்றும்.

பொருட்பெயர் வந்துழிப் பதின்றிங்கள், பதிற்றுத் திங்கள்-மடங்கு என ஈறுகெட்டு இன்னும் இற்றும் பெற்றும்.