கண்ணால் கொத்தை- கண்ணால் உணரப்படும் கொத்தமையை உடையவன் எனச் சினையாகிய கண்ணின் விகாரம் இச்சினையை உடைய சாத்தன் மேல் ஏற்றப்பட்டது. சூலொடு கழுதை பாரம் சுமந்தது என்புழிச் சூல் எய்யா இளஞ்சூலாயின் கட்புலன் ஆகாது என்பது உணர்க. முது சூலாயினும் வயிற்றுப்புடைப்பான் உளங்கொள்ளப்படுமன்றி, அது பாரம் போலக் கட்புலன் ஆகாமையும் காண்க. இவையும் நச்சினார்க்கினியர் உரைத்தனவே. தூங்குகையொடு, உறழ்மணியொடு என்று பொருள் செய்க. இனி இம் மூன்றாம் வேற்றுமை பற்றி இலக்கணக் கொத்து நூலுடையார், |