என்ற நூற்பாவை உட்கொண்டு, அதன் உரையில் கூறப்பட்டன யாவும் ஈண்டு விளக்கப்பட்டுள்ளன.இவற்றுள் அதனின் இயறல், அதற்றகு கிளவி, அதனின் ஆதல், அதனிற் கோடல் என்பன கருவி; இன்னான் ஏது என்பதும் கருவி; அதன் வினைப்படுதல் வினைமுதல்; ஏனைய உடன் நிகழ்ச்சிப் பொருளன. ஆசிரியனொடு மாணாக்கன் வந்தான்- வருதற்றொழில் இருவருக்கும் ஒத்தலின், அதனொடியைந்த ஒருவினைக்கிளவி. பொன்னொடு இரும்பு அனையர் நின்னொடு பிறரே- எங்ஙனம் பொன்னுக்கும் இரும்புக்கும் ஒப்புமை இல்லையோ, அங்ஙனம் உனக்கும் பிறர்க்கும் ஒப்புமை இல்லை என்று கூறுதலின், ஒப்பு அல்லாததனை ஒப்பாகக் கூறும் ஒப்பல் ஒப்புரையாகும். |