சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-42165

  புண்படுதலைச் செயப்படுபொருளாகிய பகைவரிடத்துச் செலுத்தியமை காண்க.

  மண்ணாள் இயன்ற குடம் என்ற தொடரில் முதற்காரணமாகிய மண் காரியமாகிய
குடத்தொடு இயைபு உடையதாய் இருத்தல் காண்க,

  வேலான் இயன்ற வடு என்ற தொடரில் துனைக்காரணமாகிய வேல் காரியமாகிய
வடுவொடு தொடர்பு நீத்துப் பிரிந்து சென்றமையும் காண்க.

  தேர் செய்தற்குத் தச்சன் நேர்முகமான தொடர்பு கொண்டமையின்
இயற்றுதற்கருத்தா ஆவான். தேவகுலம் இயற்றுதற்கு அரசன் ஏவுதல் தொழில்
ஒன்றனையே கொண்டான் அன்றி, அச்செயற்கண் நேர்முகமான தொடர்பு
கொள்ளாமையின் ஏவுதற் கருத்தா ஆவான்.

  முயற்சியின் பிறத்தலான் ஒலி நிலையாது-முயற்சியின் பிறத்தல் என்புழி,
பிறத்தற்கு முயற்சியாகிய தொழில் நிகழ்தலின் அது காரகக்கருவி. பிறந்த பொருள்
எதுவும் அழியும் என்பதனை அறிவாள் அறிதலின் பிறத்தலான் ஒலி நிலையாது
என்புழிப் பிறத்தல் என்பது ஞாபகக்கருவி.

  கொடியொடு துவக்குண்டான் என்பது கொடியால் கட்டப்பட்டான் என்னும்
பொருளது. சாத்தனைச் கட்டுங்கால் கொடி அவனை நீங்காத உடன் நிகழ்ச்சியைப்
பெற்றிருக்கின்றது.

  ஊசியொடு குயின்ற தூசும் பட்டும்- ஊசியால் தைக்கப்பட்ட ஆடையும், பட்டும்
என்னும் பொருளது. தைத்தற்றொழில் நிகழுமிடத்து ஊசி தூசினையும் பட்டினையும்
நீங்காத உடன் நிகழ்ச்சியைப் பெற்றிருக்கின்றது. கொடி கருத்தாவாகவும், ஊசி
கருவியாகவும் வந்து உடன் நிகழ்ச்சியைக் கொண்டிருத்தலின், மூன்றாவதன் பொருளாகிய
உடன் நிகழ்ச்சி கருவி கருத்தாக்களில் பொதுவாக அடங்கும் என்று கொண்ட
தொல்காப்பியனார், அங்ஙனம் அடங்காது வருவன பல உண்மையான், மூன்றாவதன்
முடிக்குஞ் சொற்களைக்