மூன்றாம் எண்ணுமுறைமை- 194 ஆம் நூற்பாவில் குறிக்கப்பட்டது. அதன்பொருள்-அம் மூன்றாம் வேற்றுமையின் பொருள். தொல்காப்பியனார் காலத்தில் ஒடு உருபு பயின்று வந்தது; நன்னூலார் காலம் தொட்டு ஆல் உருபே பயின்று வருவதாயிற்று என்பது கொள்க. காரணம் கருவி என்ற இரண்டும் கருவியாகவும், செய்வோனும் எய்திய தொழில்முதலும் கருத்தாவாகவும், இயைபு உடன்நிகழ்ச்சியாகவும் கொள்ளப்பட்டமையின் அகத்திய நூற்பாவில் ஓதப்பட்ட ஐந்தும் இம் மூன்றனும் அடங்கின. கருவிப்பொருள் பற்றிய வேற்றுமையுருபு ஏற்ற சொற்கள் வரும் முடிக்குஞ்சொற்கள் பலவாக உண்மையான் கருவி முற் கூறப்பட்டது என்பது இவர் கருத்து. முன் கூறப்பட்டனயாவும் மயிலைநாதர் உரைத்தவை. நன்.297 சாத்தன் வாளால் வெட்டினான் என்ற தொடரில், சாத்தன் விளைமுதல்; வாள் கருவி; அக்கருவியாகிய வாளினைச் சாத்தனாகிய வினைமுதல் வெட்டுதலாகிய தொழிற்குப் பயன்படுத்தியமை காண்க. மறவன் பகைவரை வாளால் வெட்டினான் என்ற தொடரில் மறவன் வினைமுதல்; வெட்டுதல் தொழில்; வாள்கருவி பகைவர் செயப்படுபொருள். வாள் ஆகியகருவி வினைமுதலாகிய மறவனுடைய வெட்டுதலாகிய தொழிலின் பயனாகிய |