| | ‘ஓர்உரு பிற்குஓர் பொருளே உரிமை வேறு பொருளையும் விரும்பும் என்க.’ | 551 |
| |
| | ‘உரிமைமுதல் மூன்றும் ஒருங்கே தோன்ற நிற்கும் உருபுகள் சில உள நினைக்கின்.’ | 60 |
| |
| | ‘தடுமாறு உருபுகள் தாம்சில உளவே.’ | 61 |
| |
| | ‘வேற்றுமை பலபல வாகத் தோன்றினும் வினைமுதல் முதலாக விளம்பும்எண் பொருளின் ஒவ்வொரு பொருளே வெவ்வே றாதலும் ஒவ்வொரு பொருளில் பல்லுருபு வருதலும் உருபுகள் தமக்குரிப் பொருளையும் உதவி வேறு பொருளையும் சிலவிரும் புதலும் எனமூன் றுள்ளே எல்லாம் அடங்கும்.’ | 64 |
| |
| | பிரயோக விவேக நூலார் ‘ஆதியது என்ப அபிகித கர்த்தா அநபிகிதம் ஆதிவிட்டு ஆறொடு மூன்றும் பெறும் என்பர் ஆய்ந்துணர்ந்தோர் ஆதியது என்ப அபிகிதம் கன்மம் அநபிகிதம் ஆதிஐந்து ஏழுஒழித்து அல்லா தனபெறும் ஆரணங்கே’ | 14 |
| |
| | ‘ஆறொடும் ஐந்தொடும் மூன்றொடும் தோன்றும் அதன்கரணம் ஆறொடும் நான்கொடும் மூன்றொடும் தோன்றும் அளித்தல் கொள்வோன் வீறொடும் தோன்றும்ஐந் தன்றிப் பெறாதுவீடும் அவதி ஈறொடுந் தோன்றும்கண் ணன்றிப் பெறாதுஇடம் ஏந்திழையே’ | 15 |
| என்று கூறியவற்றில் ஏற்பன ஈண்டுக் கொள்க. இனி முத்துவீரிய நூலார் தொல்காப்பியனாரை ஒட்டிக் கூறுவன வருமாறு:- |