சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-56697

இக் குறிப்பெச்சங்கள் மேல் ‘வெளிப்படை குறிப்பு’ (160) என்றவற்றுள் குறிப்பின்
தோன்றலாய் அடங்கும் எனின், ஈண்டுச் சொற்பாகுபாடு உணர்த்தினார்; ஈண்டுக்
குறிப்பின் தோன்றும் பொருளை வெளிப்படுத்தும் எச்சமாதல் உடைமையான் எச்சம்
என்றார் ஆகலின், ஆண்டு அடங்கா என்க. 56
 

விளக்கம்
 

எதிர்மறை எச்சம்- ஏ, ஓ, உம்- பெற்றன.
                    பிரிநிலைஎச்சம் - ஏ, ஓ-பெற்றன.
                    ஒழியிசையெச்சம்- மன், தில், ஓ-பெற்றன.

பிரிநிலை எச்சமுடிபு பற்றி இவ்வாசிரியர் சேனாவரையர் குறிப்பிட்டவாறு விளக்கம்
தந்து உரையாசிரியர் கருத்தை மறுத்துள்ளார். சேனாவரையர் உரைத்தது பொருந்தாது
என நச்சினார்க்கினியரால் மறுக்கப்பட்டுள்ளது.

சாத்தனும் வந்தான் என்றால் கொற்றனும் வந்தான் என வருதல் வினையே
கொண்டு முடிதல் வேண்டும்; வேற்று வினைகொண்டு முடியின் தொடர்ப்பொருள்
இயையாது.

‘வேங்கையும் விரிந்தன திங்களும் ஊர் கொண்டன்று’ என்ற இரண்டும் ‘மணம்
செய்யும் காலம் இஃது’ என்பதனைக் குறிக்க வந்த சொற்றொடர் ஆகலான்
ஒருவினையின்பால் படுத்தி உணரப்படும்.

உம்மை எச்சத்தொடர் இரண்டனுள் முடிக்குந் தொடர் செஞ்சொல்லாய் வரின்
அதனை முற்படக் கிளந்து, உம்மை உடைய தொடரைப் பிற்படக் கிளந்து பொருள்
கோடலே முறை என்ற இடைச்சொல்லியற் செய்தி ஈண்டும் குறிக்கப்பட்டது.

எனவென் எச்சத்துள் பெயர்- எண்- என்பனபற்றிய ‘என’வன்றி ஏனைய நான்கு
பொருளும் பற்றி வரும் ‘என’