118

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

பலவிகற்பத்து ஐந்தடிப் பஃறொடை வெண்பா :

 

`பொன்புரிந்த செஞ்சடைக்கு வெள்ளிப் புரிபுரிக்கும்
வெண்டிங்கட் கண்ணியான் வெல்கொடியு மானேறே
அங்கவன்ற னூர்தியுமற் றவ்வேறே யவ்வேற்றின்
கண்டத்தில் கட்டும் கருமணிக்கிங் கென்கொலோ
பைந்தொடியார் செய்த பகை.ழு
 
 

- சி. செ. கோ. 19

 

ஒருவிகற்பத்து ஆறடிப் பஃறொடை வெண்பா :

 

`கருந்தாது கொல்லுங் கருங்கைத்திண் கொல்லர்
வருந்தா தியன்றதொரு வல்விலங்கு பூண்டு
திருந்தாதார் முன்றிறொறுஞ் சென்றுசிலர் தூங்க
இருந்தேங் களிதூங்கி யாமேமற் றம்ம
அருந்தா தலர்தில்லை யம்பலத்திற் றூங்கும்
பெருந்தேன் முகந்துண்ணப் பெற்று.ழு
 
 

 - 20

 

பலவிகற்ப ஆறடிப் பஃறொடை வெண்பா :

 

`வில்மதனை வென்ற தலர்விழியே ; ஒன்னார்தம்
பொன்னெயில் தீமடுத்த தின்னகையே ; - பூமிசையோன்
தார்முடி கொய்தது கூர்உகிரே ; ஆருயிர்உண்
கூற்றுயி ருண்ட தடித்தலமே ; ஏற்றான்
பரசும், பினாகமும், சூலமும், என்னே?
கரமலர் சேப்பக் கொளல்.ழு
 
 

 - 21

 

ஒருவிகற்பத்து ஏழடிப் பஃறொடை வெண்பா :

 

`வானே நிலனே கனலே மறிபுனலே
ஊனேயவ் வூனி லுயிரே யுயிர்த்துணையே
ஆனேறும் ஏறே அரசே அருட்கடலே
தேனே யமுதே யளியோங்கள் செல்வமே
யானே புலனு நலனு மிலனன்றே
ஆனாலு மென்போன்மற் றார்பெற்றா ரம்பலத்துள்
மாநாட கங்காணும் வாழ்வு.ழு
 
 

- 22