| | சிற்றெண் வழியா அராகஅடி நான்கும் கீழளவு ஆகப் பேரளவு எட்டாச் சீர்வகை நான்கு முதல்பதின் மூன்றா நேரப் பட்ட இடைநடு எனைத்தும் சீர்வகை முறைமையின் அராகம் பெற்று அம்போ தரங்கத்து அராகவடி யின்றி மடக்கடி மேலே முச்சீர் எய்திக் குறில்இணை பயின்ற அசைமிசை முடுகி அடுக்கிசை முடுக்கியல் அராகம் என்னும் உடைப்பெயர் மூன்றிற்கும் உரிமை எய்தி விண்ணோர் விழுப்பமும் வேந்தரது புகழும் வண்ணித்து வருதலின் வண்ணகம் என்ப.' | | | | - மயேச்சுரம் | | |
| | `அந்தாதித் தொடையினும் அடிநடை உடைமையும் முந்தையோர் கண்ட முறைமை என்ப.' | | | | - மயேச்சுரம் | | |
| | `குறில்வயின் நிரைஅசை கூடிய அடிபெறினே வண்ணக மாகும்.' | | | | - அவிநயம் | | |
| | `அவற்றொடு முடுகியல் அடியுடை அராகம் அடுப்பது வண்ணக ஒத்தா ழிசைக்கலி.' | | | | - யா. வி. 84 | | |
| | `கலியொலி கொண்டு தன்தளை விரவா இறும்அடி வரினே வெண்கலி ஆகும்.' | | | | - மயேச்சுரம் | | |
| | `தளைகலி தட்டன தன்சீர் வெள்ளை களையுந இன்றிக் கடையடி குறையுந விரவர லில்லா வெண்கலி ஆகும்.' | | | | - மயேச்சுரம் | | |
| | `வெண்டளை தன்தளை என்றிரு தன்மையின் வெண்பா இயலது வெண்கலி ஆகும்.' | | | | - காக்கை | | |
| | `தன்தளை ஓசை தழுவிநின்று ஈற்றடி வெண்பா இயலது கலிவெண் பாவே.' | | | | - யா. வி. 85 | | |
| | `ஓதப் பட்ட உறுப்புவகை எல்லாம் ஏதப் படாமைக் கலிக்கியல்பு எய்தி | | |