செய்யுளியல் - நூற்பா எண் 48

285

 
  மெல்ல மேவர மென்முலை ஞெமுங்கப்
புல்லின் எவனோ? மெல்லியல்! நீயே,
நல்காது விடுகுவை ஆயின், வைகலும்
படர்மலி உள்ளமொடு மடல்மா ஏறி
உறுதுயர் உலகுடன் அறியச்
சிறுகுடிப் பாக்கத்துப் பெரும்பழி தருமே'
 
 

- யா. வி. 65 மே.

 
என வரும்.
  ஒழுகுவண்ணம் ஓசையான் ஒழுகி நடக்கும்;
`ஒழுகு வண்ணம் ஓசையின் ஒழுகும்'
 
 

 - தொ. பொ. 538

 
என்ப ஆகலின்.
     வரலாறு :
  `அம்ம, வாழி, தோழி! காதலர்க்கு
இன்னே பரிக்கும் இன்னா வாடையொடு
புன்கண் மாலை அன்பின்று நலிய,
உய்யலள் இவளென உணரச் சொல்லிச்
செல்லுநர்ப் பெறினே, சேய அல்ல;
இன்னளி இறந்த மன்னவர்
பொன்அணி நெடுந்தேர் பூண்ட மாவே'
 
 

 - யா. வி. 65 மே.

 
என வரும்.

ஒரூஉவண்ணம் நீங்கின தொடையாகிக் கிடக்கும்;

  'ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும்'  
 

- தொ. பொ. 539

 
என்ப ஆகலின். அது செந்தொடை.
     வரலாறு :
  `தொடிநெகிழ்ந் தனவே; கண்பசந் தனவே;
யான்சென் றுரைப்பின் மாண்பின்று ; எவனோ
சொல்லாய் வாழி தோழி! வரைமிசை
முள்ளால் பொதுளிய அலங்குகுலை நெடுவெதிர்
பொங்கிவரல் இளமழை துவைப்ப,
மணிநிலா விரியும் குன்றுகிழ வோற்கே'
 
 

 - யா. வி. 95 மே.

 
என வரும்.