| | விளங், கு, சாமரை எழுந்தலமர | -புளிமாந்தண்ணிழல் | | | நலங்கிளர் பூமழை நனிசொரிதர இனிதிருந்து அருள்நெறி நடாத்திய ஆதிதன் | -கருவிளந்தண்ணிழல் | | | திருவடி பரவுதும்; சித்திபெறல்பொருட்டே' | -யா. கா. 9 மே | |
| எனவும், |
| |
| | `பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர்' | | | | - குறள் 1121 | | |
| [நீர் - நேர் - நாள்] |
| எனவும், |
| | `நன்றறி வாரின் கயவர் திருவுடையர் நெஞ்சத்து அவலம் இலர்' | | | | | | |
[இலர் - நிரை - மலர்] எனவும் வரும். பிறவும் அன்ன. |
| | 7 |
| ஒத்த நூற்பாக்கள் |
| | |
| | `இயலசை மயக்கம் இயற்சீர்; ஏனை உரியசை மயக்கம் ஆசிரிய உரிச்சீர்.' | | | | - தொ. பொ. 325 | | |
| | `முன்நிரை உறினும் அன்ன வாகும்.' | | | | - தொ. பொ. 326 | | |
| | `நேர் அவண் நிற்பின் இயற்சீர்ப் பால' | | | | - தொ. பொ. 327 | | |
| | `இயலசை ஈற்றுமுன் உரியசை வரினே, நிரையசை இயல ஆகும் என்ப.' | | | | - தொ. பொ. 328 | | |
| | `அளபெடை அசைநிலை ஆகலும் உரித்தே.' | | | | - தொ. பொ. 329 | | |
| | `ஒற்றளபு எடுப்பினும் அற்றென மொழிப.' | | | | - தொ. பொ. 330 | | |
| | `இயற்சீர் இறுதிமுன் நேர்அவண் நிற்பின், உரிச்சீர் வெண்பா ஆகும் என்ப.' | | | | - தொ. பொ. 331 | | |