|
175 |
ஒன்றுமுத லையாண் டோதினும் வரையார். பொய்கையார். |
|
|
(4) |
| 176 |
தோற்ற முதல்யாண் டீரெட் டளவு
மாற்றல் சான்ற வாண்பாற் குரிய. |
|
|
(5) |
| 177 |
காப்புமுத லாகிய யாப்புவகை யெல்லாம்
பூப்பு நிகழ்வளவும் பெண்பாற் குரிய. இந்திரகாளியார். |
|
|
(6) |
| 178 |
தொன்1னில வேந்தர் 2சுடர்முடி சூடிய
பின்னர்ப் பெறாஅர் பிள்ளைப் பாட்டே, பரணர். |
|
|
(7) |
| 179 |
காப்பொடு செங்கீரை தால்சப் பாணி
யாப்புறு முத்தம் வருகவென் றன்முத
லம்புலி சிற்றில் சிறுபறை சிறுதேர்
நம்பிய 3மற்றவை 4சுற்றத் தளவென
விளம்பினர் தெய்வ நலம்பெறு புலவர். |
|
|
(8) |
| 180 |
தந்தை தாயே பாட்டன் பாட்டி
முந்துற வுரைத்தன் முறைமை யென்ப. |
|
|
(9) |
| 181 |
5திருந்திய பெண்மக வாயின் விரும்பிய
பின்னர் மூன்று மன்னுநீக் கென்றனர். |
| |
(10) |
| 182 |
சிற்றில் சிறுதேர் சிறுபறை யொழித்து
மற்றவை மகளிர்க்கும் வைப்ப தாகும்.
|
| |
(11) |
| 183 |
சிற்றி லிழைத்தல் சிறுசோ றாக்கல்
பொற்பமர் குழமகன் புனைமணி யூசல்
யாண்டீ ராறதி லெழிற்காம னோன்பொடு
வேண்டுத றானும் விளம்பினர் புலவர். |
| |
(12) |
|
[பி-ம்.] 1 னிலை. 2 பொன்முடி. 3 பத்திவை.
4 “சுற்றத் தளவுங்
கவிக்கெல்லை யாய்க்கொண்டு சொல்லுவரே” என்றார்
நவநீதப்பாட்டியலுடையாரும். [பி-ம்] 5
இச்சூத்திரத்துக்குமுன், |
| |
‘பெண்பா லாயிற் பின்னர் மூன்று
மன்னுதல் நீக்கினர் வாய்மொழிப் புலவர்’. (14)
என்று தனியே ஒரு சூத்திரம் எழுதப்பட்டுளது. [ச-பி.] |
|