|
பன்னிருபாட்டியல் |
|
214 |
தேவர்க்கு முனிவர்க்குங் காவ லரசர்க்கு
நூறு தொண்ணூற் றைந்துதொண் ணூறே
ஒப்பி லெழுப தமைச்சிய லோர்க்குச்
செப்பிய வணிகர்க் கைம்பது முப்பது
வேளா ளர்க்கென விளம்பினர் செய்யுள். |
|
|
(43) |
|
6-உலா. |
|
215 |
முதனிலை பின்னெழு நிலையுலா வெண்கலி. |
|
|
(44) |
|
216 |
பாட்டுடைத் தலைவ னுலாப்புற வியற்கையு
மொத்த காமத் திளையாள் வேட்கையுங்
கலியொலி தழுவிய வௌ¢ளடி யியலாற்
றிரிபின்றி 1நடப்பது 2கலிவெண் பாட்டே.
பொய்கையார். |
| |
(45) |
|
217 |
பேதை முதலா வெழுவகை மகளிர்கண்
டோங்கிய வகைநிலைக் குரியா னொருவனைக்
காதல்செய் தலின்வருங் கலிவெண் பாட்டே. |
| |
(46) |
|
218 |
குடிநெறி மரபு கொளல்கொடை விடிய
3னன்னீ ராட னல்லணி யணித
றொன்னக ரெதிர்கொள 4நன்னெடு வீதியின்
மதகளி றூர்தன் முதனிலை யாகும். |
| |
(47) |
|
[பி-ம்.] 1நடப்பினது;
நடப்பது வெண்கலிப் பாட்டே.
2“இனி யொருபொருணுதலாது
திரிந்துவருங் கலிவெண்பாட்டும் ஈண்டுக் கூறிய நெடுவெண்பாட்டோ
டொருபுடையொப்புமையின் அக்கலிவெண் பாட்டாக இக்காலத்தார்
கூறுகின்ற உலாச்செய்யுளும் புறப்புறக் கைக்கிளைப் பொருட்டாதல்
ஒன்றெனமுடித்தல் என்னு முத்தியாற் கொள்க. அவ்வுலாச் செய்யுளிரண்டுறுப்பாயும் வெண்பாவிற் கெட்டும் வருதலிற் கலிவெண்பாவின்
கூறாம். இக்காலத்து அதனை ஓருறுப்பாகச் செய்து செப்பலோசையாகவுங்
கூறுவர். அது துள்ளலோசைக்கே யேற்குமாறுணர்க” (தொல். செய். 118)
எனவும், “அது திருவுலாப்புறத்துள், ‘வாமான வீசன் வரும்’
(சேரமான் பெருமாணாயனார் ஞானவுலா) என முடித்து மேல்
வேறோருறுப்பாயவாறும், ஒழிந்தவுலாக்களுள் வஞ்சியுரிச்சீர்
புகுந்தவாறும் அடிவரையறையின்மையும்” (தொல். செய். 161) எனவும்
நச்சினார்க்கினியர் கூறுவர்.
[பி-ம்.] 3லின்னீ, 4னன்னெடு. |