பக்கம் எண்: தேடுக
பன்னிருபாட்டியல் பக்கம் : 53

இனவியல்

59-பாட்டு. (பத்துப்பாட்டு.)

353  

நூறடிச் சிறுமை நூற்றுப்பத் தளவே
1யேறிய வடியி னீரைம் பாட்டுத்
தொகுப்பது பத்துப் பாட்டெனப் படுமே.
 

(182)

354  

அதுவே: அகவலின் வருமென வறைகுநர் புலவர்.
 

(183)

60-கடைநிலை.

355  

கடைநிலை யென்பது காணுங் காலைப்
பரிசி லுழப்புங் குரிசிலை முனிந்தோர்
கடையகத் தியம்புங் காட்சித் தென்ப.
 

(184)

356  

பரிசினீட் டித்த லஞ்சி வெறுத்தோர்
கடைநின் றுரைப்பது கடைநிலை யென்ப.2
 

(185)

     [கடையெனினும் அங்கதமெனினும் ஒக்கும்.]
61-கையறுநிலை.

357  

வலங்கெழு வேந்தர் 3வான்புகக் கவிஞர்
கலங்கித் தொடுப்பது கையறு நிலையே.
 

(186)

358  

வெற்றி வேந்தன் விண்ணக மடைந்தபின்
கற்றோ ருரைப்பது கையறு நிலையே.
 

(187)

359  

4கலியொ டுவஞ்சியிற் கையற வுரையார்.
 

(188)

360  

5சொற்றன வல்ல வேறுபிற தோன்றினு
மத்தகு 6மரபி னடக்கினர் கொளலே.
 

(189)

இனவியல் முற்றும்.

பன்னிருபாட்டியல் முற்றிற்று.


[பி-ம்.]

1 யொன்றிய.
  2 இதற்குப் பின் சேர்த்துக் கொள்ளும்படி,
  ‘கடைநிலை யெனினும் வசைப்பாட் டெனினும்
அங்கத மெனினு மொருபொருண் மேற்றே’.
 

 (161)

     என ஒரு சூத்திரம் தனியே எழுதப்பட்டுள்ளது. [ச-பி.]
3 வாழ்வுகக். 4 கலியே. 5 மற்றவை வல்ல வினம்பெரி தொன்றினு. 6 பாவி னடங்கின வென்ப.
முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்