பக்கம் எண் :

பொருளணியியலுரை121

முத்தநகைவெம்முலைபோன்மலைகொடியே
யெய்த்தவிடைநுதலுக்கேந்திழா--யொத்ததுதா
னேற்றுருவங்கொண்டநிலாத்தளிரேகூற்றுருவம்
வேற்றுருவங்கொண்டனையாண்டுமெய்
(137)

இதனுள், பன்மைச்சினைக்குப் பன்மைச்சினையும், பன்மைச்சினைக் கொருமைமுதலும், ஒருமைச்சினைக் கொருமைமுதலும், ஒருமைச் சினைக்கு ஒருமைச்சினையும், பெண்பாற் காண்பாலும் மயங்காதும் மயங்கியும்வந் துவமையாயிற்று. இதனுள் முத்தமும் நகையும் முலையும் சாதியேகவசனம். பகுதி - சேட்படை. துறை - தலைவன் பாங்கிக் கவயங்கூறல்.

‘கருஞாயிறன்னான்,’ ‘விசும்புதோலுரிப்பனபோல,’ ‘மலைநடந்தனைய,’ ‘அமிர்துபுளித்தாங்கு’ இவை முதலுஞ் சினையும் வினையுங் குணமு மில்லாதன வுவமையாயின.

“கடல்கண்டன்னகண்ணகன்பரப்பின்,” ‘மாரியன்னவண்மைத், தேர்வேளாயைக்காணிய,” “தெள்ளமிர்தென்னத்திருந்தியதேமொழி,” “ஏறுபோற்பீடுநடை” என்பன உவமையினதுயர்ச்சியாற் பொருட்குயர்ச்சியாயின.

“அவாப்போ லகன்ற வல்குன்மேற் சான்றோ, ருசாப்போல வுண்டே மருங்கு” லென்பன கழியபெரியவாயினுங் கழியசிறியவாயினுஞ் சிறப்பிற்றீரா வுவமையாயின. சிறப்பிற்றீர்வனவு முவமவொழிபிற் கூறுப. எண்மெய்ப்பாட்டினும் அகத்தினும் புறத்தினும் வருவன முந்து நூல்களுட் கண்டுகொள்க.

அஃதாக ; இதன் முதனூல்செய்த தெண்டியாசிரியர் பண்புமுதலாகக் காரண மூன்றென்ப துணர்ந்து மிந்நூலுடையா ருறுப்பினைக் கூட்டிக் காரண நாலென்பதூஉம் நிலைக்கள னைந்தென்பதூஉம் மிகைபடக் கூறலென்னுங் குற்றமாமாலோவெனின்? ஆகாது ; என்னை? தெண்டியாசிரியர் “வடிவி னளவின் வண்ணத்தின் வரூஉ” மென்னுஞ் சூத்திர நோக்கி வடிவும் பண்பினுளடங்குமென் றுட்கொண்டாரேனுமிந் நூலுடையார், உற்றுணரும் பண்பும் கட்புலனாம்பண்பு மெனப் பண்பினை வேறுபடக் கொண்டார், அங்ஙனங்கோடல் வடிவுபற்றியபண்பு இருளின்