கண்ணும் உற்றுணரப்படும் ; வண்ணமாகிய கட்புலனாம் பண்பு அவ்வாறுணரப்படாதாதலால் வடிவினைக்கூட்டி நாலென்றார். அன்றியும், “வினைபய மெய்யுரு வென்ற நான்கே, வகைபெற வந்த வுவமைத் தோற்றம்” எனவு மிக்கருத்தேபற்றி முதனூல்செய்த ஒல்காப்பெருமைத் தொல்காப்பியனாருங் கூறினார் ; இதற் கதுவு முந்து நூலாகலின் அவர்கருத்தே யிந்நூலுடையாரும் உட்கொண்டாரென வுணர்க. அன்றியும், “விரவியும் வரூஉ மரபின வென்ப,” “சிறப்பே நலனே காதல் வலியோ, டந்நாற் சொல்லு நிலைக்கள னென்ப,” “கிழக்கிடும் பொருளோ டைந்து மாகும்,” “முதலுஞ்சினையுமென் றாயிருபொருட்கு, நுதலிய மரபி னுரியவை யுரிய,” “உயர்ந்ததன் மேற்றே யுள்ளுங் காலை, “பெருமையுஞ் சிறுமையுஞ் சிறப்பிற் றீராக், குறிப்பின் வரூஉ நெறிப்பாடுடைய,” “பெருமையுஞ் சிறுமையு மெய்ப்பா டெட்டன், வழிமருங் கறியத் தோன்று மென்ப” எனவுங் கூறிய சூத்திரங்களானு மேனையவு முணர்க.
| 93. | அதுவே, நிறைவினுங்குறைவினுநிகழ்த்துதனெறித்தாய்த் துறைதொறும்பழமையும்புதுமையுந்தோய்ந்து விரியினுந்தொகையினும்விழுமிதினடைபெறும். |
(எ-ன்) இதுவும் அவ் வுவமைக்காவதோர் பொது விலக்கணமுணர்-ற்று. (இ-ள்) அதுவே- அவ்வகைப்பட்ட வுவமை யென்னுமது, நிறைவுவமை குறைவுவமை யெனப் புலவராற் கூறுதலைத் தனக் கிலக்கண நெறியாகவுடைத்தாய் வினைமுதலாய் நால்வகைப்பட்ட இடந்தோறு முந்து நூற்புலவராற் கூறப்பட்ட தொன்மைத்தாகியும், அதன்பின்னர் அவ்வவகாலத்துப் புலவராற் புதுவதுபுதுவதாகக் கூறப்பட்டுவரு வனவுமாகப் பொருத்தமுற்று விரியுவமை தொகையுவமை யென இரு திறத்தினும் விழுமிதாக நடைபெறு மென்றவாறு. விழுமிதினென்று சிறப்பித்தவதனால் இவைநான்கும் இனிமேல் வரும் விரியுவமையனைத்திற்கும் பொதுவாமெனவும், இன்னு மவ்விலேசானே அவற்றுள் விரியுவமையுந் தொகையுவமையும் வினைமுதலிய |