பக்கம் எண் :

பொருளணியியலுரை123

நான்கினோடு மெட்டாமெனவுங் கொள்க ; என்னை? “நாலிரண் டாகும் பாலுமாருண்டே” என்றாராகலின்.

(8)

94. அவற்றுள்,
முக்கியப்பொருட்டிறமுற்றுதனிறைவே.

(எ-ன்) நிறைவுவமையின திலக்கண முணர்-ற்று.

(இ-ள்) உவமேயத்தி னான்குகூறுபாடு முவமையினு முற்றக் காண்பன நிறைவுவமையா மென்றவாறு.

ஆராவமுதமளித்ததிருப்பாற்கடலு
ணாராயணனாகணைமீது--நேரிழா
யெப்படியேகண்வளராநின்றானெனுமரங்கத்
தப்படியேகண்வளர்வானாம்.
(138)

இது நிறைவுவமை. இதனுள், திருப்பாற்கடனாத னுவமை. ஆரிய ரிதனைப் பூரணவுவமை யென்ப. அங்ஙனமாதல், அவன் கண்வளரா நின்றதுபோல விவனுங் கண்வளராநின்றானென வினையுவமையும், அவன் றிருமேனி யெப்படியேயிருக்குமென்னும் அப்படியே யிவன் றிருமேனியுமிருக்கு மெனவே வடிவினோடு காந்தியாகிய பண்பும், அவனைச் சேவிப்பார்க் கச்சேவை காரணமாக முத்தியாகியகாரியம் பயக்குமது போல விவனைச் சேவிப்பார்க்கு முத்தியாகியகாரியம் பயக்குமெனப் பயவுவமையும் உவமையாகிய திருப்பாற்கடலிடத்தும் வினைமுதலிய நான்கும் பூரணமாகி யுவமை யுயர்ந்தபடியுங் காண்க. எப்படியே கண் வளராநின்றானெனு மென்பது பிரமன்முதலாயினார் புராணங்க ளெப்படியேகூறுமென்பதாம். பயவுவமையென்பது ஒன்றன்றொழி லேதுவாகப் பிறக்குங் காரியம். அஃதெச்சமாயிற்று. நேரிழா யென்பது மகடூஉமுன்னிலை. இரண்டாற்றிடையரங்கத்துத் திருமதிட்குப் பாற் கடனள்ளிடை யாவரண முவமை. திணை - பாடாண். துறை - கண்படை வாழ்த்து.

பனிமதிக்கிரணம்வியன்களநடுவட்
      பரந்துடல்கதுவுபோர்ப்பாய்மா
முனியுறப்பொழியுமிருண்மதமுடுக்க
      முரணிழந்திரியல்போம்வேடர்