குனிதிரைத்திருப்பாற்கடலினைக்கடைநாட் கொதித்தெழுங்கருவிடந்தொடரத் தனிதனியுலக்கற்றறிவிழந்திரிந்த தலைமைவானவரையொத்தனரே. | (139) |
இதுவுமது. இதனுள், திருப்பாற்கடலீன்ற கருவிடந் தொடர்ந்தது வெண்ணிலவு வியன்களநடுவட் பரந்துடல் கதுவிய போர்ப்பாய்மாப் பொழியு மிருண்மத முடுக்கினதற் குவமை. முரணிழந் திரியல்போம்வேடரென்பது தனித்தனி யொருவர்க்கொருவ ருதவாது ஓடின தலைமைவானவரை யொத்தன ரென்றவாறு. இருண்மத முடுக்கவெனவே பண்பும் வடிவும் வினையுவமையும், அறிவிழந்தெனவே அதனாலாய காரியமாதலாற் பயனுவமையுமாகிப் பூரணவுவமையாயவாறு காண்க. (9) | 95. ஒன்றாதியசிலவொப்பதுகுறைவே. |
(எ-ன்) குறைவுவமையாமா றுணர்-ற்று. (இ-ள்) உவமேயத்தின்வினைமுதலிய கூறுபாடு நான்கும் ஒவ்வாது அவற்றுள் ஒன்றுமுதன் மூன்றொப்பது குறைவுவமையா மென்றவாறு. இஃது “ஒரீஇக் கூறலு மரீஇய பண்பே” என்பதன்பாற்படும். வாவித்திருக்குருகூர்மாறாநின்வண்டமிழென் னாவிற்கினிமைநயப்பதாற்--றேவர் மருந்துநிகரென்றேமதித்துரைப்பன்முற்றப் பொருந்துவமற்றின்மையினிப்போது. | (140) |
இஃது ஒன்றொத்த குறைவுவமை. வெள்ளைப்பிறைக்கோட்டுவெங்கரியைவென்றவிற் பிள்ளைப்பெருமான்றென்பேரைவாழ்--வள்ளைக் குழையாரைத்தோய்ந்தகன்றகொற்றவனைக்காய்ந்த பிழையார்பொறுப்பாற்பிறர். | (141) |
இஃது இரண்டுபெற்றவுவமை.
|