பாயுங்கருங்கயல்போற்பாங்கியிவளென்றுமருங் கேயும்படிதாவினதியற்பாத்--தோயும் புவிநாவலர்புகழ்மால்புட்குழியாள்செவ்விக் கவினானனத்துலவுண்கண். | (142) |
இது தொழில் பண்பு வடிவு மூன்றும்பெற் றொன்று குறைந்த வுவமை. “அகர முதல வெழுத்தெல்லா மாதி, பகவன் முதற்றேயுலகு” “மாதர் முகம்போ லொளிவிட வல்லையேற், காதலை வாழி மதி” என்பனவும் எடுத்துக்காட்டுவமை எனவும், ஒன்றொத்த குறைவுவமை எனவும் படும். செய்யகமலமுகஞ்செங்கனிவாய்முத்தநகை வெய்யகளபமுலைமின்மருங்குன்--மொய்யிழாய் பையரவப்பாயலான்பாடகத்தான்மால்வரைவாழ் தையலடிமாந்தளிர். | (143) |
இதுவுமது. பகுதி - சேட்படை. துறை - தலைவன்பாங்கிக் கவயவங்கூறல். வடநூலார் உலுத்தவுவமை யென்பது மிது. முந்துநூற் புலவராற் கூறப்பட்டுத் தொன்றுதொட்டுவரு முவமை யாவன :- ‘புலிபோற்பாயுமறவன்,’ ‘மாரியன்னவண்மை,’ ‘துடிபோற் சுருங்கு மருங்குல்,’ ‘பவளம்போன்ற செவ்வாய்,’ ‘குறைபடுமதியந்தே யக்குறுமுயறேய்வதேபோல்,’ ‘நஞ்சுமமிர்தமுமேபோல் குணத்த,’ ‘கரு மணியம்பாலகத்துப்பதித்தன்ன,’ ‘பொருகயற்கண்’ என்பன முதலியன. அதன்பின்ன ராகுங்காலங்கடோறும் புலவராற் புதுவதுபுதுவதாகப் புணர்த்தவற்றுட் சில வருமாறு :- கோழரையகாஞ்சிரைதாம்பழுத்தருகேநிற்பவற்றிற் குறுகாதாங்குக் காழிலவாங்கொழுங்கதலிக்கனிகளைச்சேட்சென்றருந்துங் கவிகண்மார்க்க மூழிலவாய்ப்படைத்தபொருள்பிறர்க்குதவாவுதலுத்தரைநீத் துசிதமான வாழ்வுடையோர்பொன்மனைச்சென்றமிர்தருந்திப்பசிதணிவார் மார்க்கமானும். | (144) |
|