பக்கம் எண் :

128மாறனலங்காரம்

(இ-ள்) உவமையும், உவமவுருபும், வினை பய முறுப் புருவென்ற நான்கினு ளொன்றும், உவமேயமும் என்னு நான்கும் ஒன்றற் குவமங் கூறுமிடத்துத் தொகாது விரிவன விரியுவமையா மென்றவாறு.

தவலருஞ் சிறப்பிற் றாம்விரிவன வென்றதனாற் பெயரு முறையுந் தொகையுஞ் சிதையாமல் வருதல் சிறந்ததென் றுணர்க. அவையாவன :- பவளம்போலச் செவ்வா யென்புழி, பவளம் உவமையெனவும் உவமான மெனவும் படும். போலவென்பது உவமவுருபு. செம்மை யென்பது குணமாகியவேது. வாயென்றது உவமேயமெனப்படும். இப்பெயர்-பெயர், இம்முறை முறை, இத்தொகை தொகை யெனக்கொள்க.

கருங்குவளைபோற்கருங்கண்கன்னல்போலின்சொற்
சுருங்குதுடிபோற்சுருங்கு--மருங்குல்
பிடிபோலியங்குநடைப்பெய்வளையைக்கண்டாற்
குடிபோங்குடிபோங்குணம்.
(152)

இதனுள் உவமைமுதலிய நான்கும் முறையே வந்தவாறு காண்க. அன்றியும், வினை பய முறுப்புரு வென்ற நான்குவமையு மிதனகத்து வந்தவாறுங் கண்டுகொள்க. அடுக்குத் துணிவின்மேற்று. குணம் - அறிவு. குடிபோமென்றல் தன்னிலையி னீங்குமென்றல். பகுதி - பாங்கற் கூட்டம். துறை - தலைவன்வியத்தல்.

இலவிதழ்போற்செவ்வாயியற்றமிழ்போலின்சொல்
கலகநமன்போலவடுங்கண்க--டிலகப்
பிறைபோல்வளைநுதலிப்பெண்ணமிர்தைக்கண்டா
லறைபோமறைபோமறிவு.
(153)

இதுவுமது. இதனுள்ளும் நான்குவமையும் வந்தவாறுகாண்க. துறை - இதுவுமது. இதன்கண் ணடுக்குந் துணிவின்மேற்று. அறை போதல் - கீழறுத்தல்.

(11)

97. உரைத்தநான்கினுளொன்றிரண்டிடையன
யாப்பினுளிடைப்பட்டெஞ்சலுந்தொகையே.

(எ-ன்) ஏனைத் தொகையுவமையிலக்கணமுணர்-ற்று.