இந்நூலுடையா ருவமவுருபு தொகுவதுந் தொகையுவமையென்ற தென்னையோவெனின், அஃதே ; நன்றுசொன்னாய் ! இவையிரண்டிற்கும் முதனூலாகிய தொல்காப்பியத்துள் “உவமைத் தொகையே யுவமவியல” என்பதனாலும், அதன்பின்னர் நேமிநாதர் பவணந்தி முதலியோரும் “உவமவுருபிலதுவமத்தொகையே” என்பதனாலுங் கூறப்பட்டது. பவளவாய்முத்தநகைப்பைந்தொடியீரூழி யவளவாய்க்கங்குனெடிதாமோ--துவளருவிச் சோலைமலையார்துணைத்தோளிற்பைந்துளப மாலைமலையாமயிற்கு. | (156) |
என்ப திரண் டிடையிற் றொக்க தொகையுவமை ; என்னை? பவளம் போலச் சிவந்த வாயினையு முத்துப்போல வெளுத்த நகையினையுமென்னு முவமவுருபும் பண்பு மிடையிற் றொக்கதா லென்றுணர்க. திணை-பெருந்திணை. துறை - கண்டுகைசோர்தல். கறைவேல்விழியிலவிதழிதழ் நறைநாண்மலரஃதானனம் புருவஞ்சிலையுருவம்புய லுருவம்புரிகுழலெனுமது பொன்னங்கிரிகொங்கைத்துணை மின்னென்றுரையிடைகண்டிலன் எனவாங்குக் கற்றறிவுடையவென்னிறையினைக்கலந்து ணற்றிருவுறைவிடநண்பா சொற்றமிழ்மாறன்றுடரிவண்பொழிலே. | (157) |
இதுவு மிரண்டு தொக்க தொகையுவமை. இஃ தாறடித்தா யொன்றியும் ஒன்றாதும் வரும் வஞ்சித்தளையான், எனவாங்கு என்னுந் தனிச்சொற்பெற்று மூன்றடி நேரிசையாசிரியச்சுரிதகத்தாலிற்ற குறளடி வஞ்சிப்பா. பகுதி - பாங்கற்கூட்டம். துறை - இயல்பிடங்கூறல். ‘இடைப்பட்டெஞ்சலு’மென்ற வும்மையா னிடைப்பட்டுத்தொகாது முதலானும் முதலைக்கூறச் சினையறிகிளவியாகிய வாகு பெயரானும் |