பக்கம் எண் :

பொருளணியியலுரை131

உவமையு முவமவுருபும் விரிந் தீற்றி லிரண்டு தொகுவனவு முளவென்ப தூஉந் தோன்றிநின்றது.

கொடிபோல்வடவரைபோற்கொவ்வைபோற்காமர்
பிடிபோலிளமான்பிணைபோல்--வடிவமைந்த
தென்னாருயிரமார்க்கின்னமிர்தன்றீந்தபிரான்
றன்னாகையன்னாடனக்கு.
(158)

(இ-ள்) கொடிபோ னுடங்குகின்ற விடையினையும், வடமலை போலப் பெருத்த முலையினையும், கொவ்வைக்கனிபோலச் சிவந்தவாயினையும், அழகிய பிடிபோன்ற மென்னடையினையும், இளைய மான்பிணை போல வெருண்ட நோக்கினையு முடைத்தாகிய வடிவா லழகமைந்திருப்ப தொன்று ; தோழீ யெனக் குயிர்போலச் சிறந்தவனுமாகி யமரர்க்கு முன்னைநா ளமிர்தமீந்தபிரான் றிருநாகையனையாட் கென்றவாறு.

இதனு ளீற்றில் விரித்தவிரண்டுஞ் செய்யுட்கட்டொக்கவாறு காண்க. தோழீ யென்னு முன்னிலை யெச்சமாயிற்று. பகுதி - சேட்படை. துறை - தோழிக் கவயவங்கூறல்.

இரண்டுமென்ற வும்மை யெச்சமாதலா னீற்றின் மூன்று தொகு வனவுமுள.

அன்னநடைமானோக்கணியிழாய்வார்சுமந்த
பொன்னசலந்தன்னைப்பொறுப்பதாய்--முன்னுதித்த
வெய்யாநடுவறக்கொன்றிட்டதைவைத்தென்னோசெங்
கையான்மறைத்தமையுண்கண்.
(159)

என்பது, அன்னநடைபோன்ற மென்னடையினையு மானோக்குப் போன்ற வெருண்ட நோக்கினையு மழகிய பூணினையு முடையாய் ! வாரைச் சுமந்த வாய்ப் பொன்மலைபோலப் பணைத்த முலையானவை தம்மைச்சுமப்பதுமாய்த் தாம் பிறந்து பணைப்பதற்குமுன்னே பிறந்த வுடன்பிறப்பாகிய தேயாநடுவினை முற்றக்கொன்றவற்றைக் கொல்கவென வெளியில்வைத்து யானுய்யும்படிக் குனதுயிர்போன்ற தோழியைக் காட்டித்தந்த மையுண் கண்களைக் கைகளான் மறைத்த தென்ன பேதைமையோ வென்றவாறு.

உண்கண்களையென் றோர் சொல் லிறுதி யிரண்டாவது தொக்கு விரிந்தது. ஒழிந்த சொல்லெச்சங்களும் குறிப்பினால் விரித்துரைத்த வாறுங் காண்க. பகுதி - இடந்தலை. துறை - நாணிக்கண்புதைக்க வருந்தல்.

(12)