பக்கம் எண் :

132மாறனலங்காரம்

98. இருமையுமொருதொடர்பினுளுறலியல்பே.

(எ-ன்) இன்னு மத் தொகை விரி யுவமைகட் காவதோர் விதியுணர்-ற்று.

(இ-ள்) அத்தொகையுவமையும் விரியுவமையு மாகிய விரண்டு தன்மையு மொருசெய்யுளகத்து வருதலுமா மென்றவாறு. உம்மை செய்யுள்விகாரத்தாற் றொக்கது.

மொழியமுதமுற்றாமுலைமுகுளம்வைவேல்
விழிமகிழ்மாறன்றுடரிவெற்பி--லெழின்மயிற்கு
நன்போதவிழ்குழல்கார்நண்பனேசெம்மேனி
பொன்போன்ம்பல்வெண்முத்தம்போன்ம்.
(160)

என்பது, நண்பனே ! மகிழ்மாறன் றுடரிவெற்பி லழகிய மயில்போலுஞ் சாயலுடையாட்கு மொழி யமுதம்போலும் ; இளமுலை தாமரைமுகுளம் போலும் ; விழி கூரிய வேல்போலும் ; செருகிய முல்லையரும்பவிழாநின்ற குழல் கார்போலும் ; சிவந்தமேனி பொன்போலும் ; வெண்பல் முத்த நிரைபோலு மென்றவாறு.

இதனுள் முன்னையநான்கும் உவம வுருபு மேதுவு முவமேயத்தை முன்னிட்டுத் தொக்கன. எழின்மயின் முற்றுவமை பின்னையவிரண்டும் விரியுவமை. போலு மென்னு முவமவுருபீற்றினுகரம், “செய்யுமெனச்சவீற் றுயிர்மெய் சேறலுஞ், செய்யுளு ளும்முந் தாகலு முற்றே, லுயிருமுயிர் மெய்யு மேகலு முளவே” என்பதனால் முற்றாதலின் உயிர் கெட்டது. “மெல்லெழுத் தியையின் னகார மாகும்” என்பதனால் லகாரம் னகாரமாய்த் திரிந்தும், “னகார முன்னர் மகாரங் குறுகும்” என்பதனா லீற்றுமகாரங் குறுகியும், “செய்யு ளிறுதிப் போலி மொழிவயின், னகார மகார மீரொற்றாகும்” என்பதனா லீரொற்றுடனிலையாயும், மேலே பகரவொற்று வருதலின் செய்யுளிடைப்பட்டும் வந்த முற்றுப் போன்ம் என்றாயிற்று. “ஐவிரைமாண்பகழியரந்தின்வாய்போன்ம் போன்ம்போன்ம், பின்னுமலர்க்கண்புனல்” எனப் பரிபாடலாகிய சங்கச் செய்யுளகத்தும் பகர மேலே வருதலாற் செய்யுளிடைப்பட்டும் வந்தமை காண்க. இது தொகைவிரியுவமை.

இன்னும் வேறுபட வருவனவெல்லாந் தொகைவிரியுவமைக்க ணமைக்க.

(13)