பக்கம் எண் :

66மாறனலங்காரம்

அருமறையாய்நள்ளிரவிற்கொடுபோகிவசுதேவராயர்பாடித்
திருநகரத்திடைகரப்பவளர்ந்தவனும்வெண்ணெயினைத்திருடிமேனாட்
பொருவறுகைத்தாமரையாற்செங்கனிவாய்வைத்தவனும்போதனேற
னிருவருங்காண்பதற்கரிதாமந்தாமந்ததிபாண்டற்கெளிதினன்பால்,
(24)

கொடுத்தவனுமானிரைகாத்தருள்காலைக்
      கன்மாரிகுடைகுன்றாகத்
தடுத்தவனுநான்முகத்தோன்கொடுபோய
      பல்லுருவின்றன்மையாக
மெடுத்தவனுந்தேவகியீன்றருள்புதல்வன்
      றுரோவதியாமின்பக்கொம்பன்
றுடுத்ததுகிலிருஞ்சபையுட்டொலையாமை
      யளித்தவனுமுண்மைகூறின்,
(25)

காண்டகுபொன்முடியுதைத்துக்கஞ்சனைக்கொன்
      றுறவோர்முன்கடுஞ்சொற்கூறப்
பூண்டதொழிற்சிசுபாலன்பொன்முடிசக்
      கரத்தறுத்துப்புவனம்போற்றப்
பாண்டவற்குத்தூதாகிநூற்றுவர்மு
      னுருணெடுந்தேர்ப்பாகனாகி
யாண்டகைமைத்தருமன்முதலவர்க்கவனி
      யனைத்துமளித்தவனுமன்னோ.
(26)

இவைமூன்றும் பெயர்ப்பெயர்கொண்டுமுற்றின சாந்தானிக மத்தியகுளகம். துறை - கடவுள்வாழ்த்து.

தெள்ளுநான்மறைப்பனுவலுமயனையாதியரும்
வெள்ளிவெண்மதிக்கடவுளுங்கதிருமீன்கணமுந்
தள்ளரும்பொறைமன்னுயிர்க்கணங்களுந்தழங்கு
கொள்ளைவெண்டிரைப்புணரிமொண்டெழநிலைகுலையா,
(27)

வாக்கும்பாதமும்பாணியுங்கரணமுமற்று
நீக்கமுற்றமன்னுயிர்கடாமாயையுண்ணெடுங்கற்
றாக்குமாடகத்துகண்மெழுகடைந்தபோற்றயங்கக்
காக்கும்வாய்மையீங்கெனதெனத்திருவருள்கலந்தே,
(28)

காலம்யாவையுங்கழிந்தபின்கழிந்தபேருருவின்
ஞாலமுற்றவுண்டுறுபுனனடுவணநயந்தோ
ராலநுண்டளிரெனுமனந்தனிலுலகனைத்தும்
பாலனாகியுள்ளடக்குபுதுயின்றனன்பரிப்பான்.
(29)