பக்கம் எண் :

பொதுவியலுரை67

இவைமூன்றும் வினைப்பெயர்கொண்டு முற்றின சாந்தானிகாந்திய குளகம். திணை - பாடாண். துறை - கண்படைநிலை.

(குருகாமான்மியம். )

பரத்துவமுதலாப்பஞ்சவுற்பனனாம்
       பரமனெமமிறைவனாமெனல்போல்
வரத்தொடும்புகழும்பஞ்சமாத்தொழிலும்
       வழங்கலுமிவன்றிறத்தெனல்போற்
றிரத்தவாம்பஞ்சபூதமுஞ்செனித்த
      செய்கையுமிவன்றிறத்தெனல்போற்
கரத்தினிற்பஞ்சாயுதங்களேதரித்த
       கருணையங்கடவுளாமெனல்போல்,
(30)

ஞானமுமழகும்வீரமுந்திருவுநவையிலானந்தமுமெமவே
யானவேனையவாமுலகமென்பவற்றிற்கவையமைதியவலவெனல்போல்
வானுறநிவந்தவெழுநிலத்தமைந்தமாடசூளிகையின்யாப்புறுத்தைம்
பானிறந்தழீஇயதுகிற்கொடிநுடங்குபாங்கரின்வயங்குமெம்மறுகும்,
(31)

செம்மையின்யாணர்த்திவ்வியமணியாற்
       செழும்பொனாற்றிசைதிசையெறிக்கும்
பொம்மலுநிவப்பும்வியலுநீளிடையும்
       பொருந்தலினொருமறுகிடைப்புக்
கிம்மறுகெவனிங்கிவற்றுளிம்மாட
      மெம்மணிமாடமென்றியாருந்
தம்வயிற்செறிந்தோரிமைப்பருநாட்டந்
      தாங்கியுமறிவருந்தகைய.
(32)

இவைமூன்றும் பண்பிடனாகத்தோன்றினவுடைமைவினைக்குறிப்புக் கொண்டுமுற்றின சாந்தானிகாந்தியகுளகம். சாந்தானிககுளகமென்பது மூன்றுபாட்டு வினைமுதலியவற்று ளொன்றுகொண்டு முற்றுவது. திணை - இதுவுமது. துறை - பரமபதவருணனை. இவையுள குருகாமான்மியம். ஒழிந்தனவும் வந்தவழிக்கண்டுகொள்க. சாந்தானிககுளகம் முற்றும்.

ஆதிப்பரப்பிரமநாராயணனென்றுஞ்
சோதிச்சுடர்மயமாந்தோற்றஞ்சா--னீதிச்
சொருபமுடனுருவந்தோய்ந்துளன்காணென்று
மொருபரந்தாமத்தானென்றும்,
(33)