பாங்குடையமன்னுயிரொன்றல்லபலவென்று மாங்கவற்றுணீங்காதவனென்று--மோங்கவற்றை நித்தியமாமென்றுமுடனித்தியமன்றென்றுமதை யுய்த்ததுபூதாகியதென்றும், | (34) |
முத்திக்கவனேமுதற்காரணனென்றும் பத்திவிடாதேபயிலென்றுஞ்--சத்தியமாய்ச் செல்வத்திருப்பதிவாழ்சீநிவாதன்பகர்ந்த சொல்வித்தகமேதுணிந்து, | (35) |
நாமானிடப்பிறவிநன்றென்றுந்தேர்ந்தனமாற் காமாதிகளாங்களைகளைந்து--பாமாலை சாத்தியேநெஞ்சேதருமெமக்குமுத்தியென வேத்தியேயின்புற்றிரு. | (36) |
இவைநான்கும் வினைகொண்டுமுற்றின காபாலிகாந்தியகுளகம். திணை - பாடாண். துறை - குரவனைவாழ்த்தல். இச்சிப்போனிட்டவிணையடிப்போதன்றொருவ னுச்சிப்போதானதுலகறிந்த--நிச்சயமே யாய்ந்தாலொருவன்சிரத்தணிந்ததன்றொருவன் பூந்தாள்கழுவும்புனல், | (37) |
இளிவந்ததுசெய்திரந்தானொருவன் வெளிவந்தொருவனதைமீட்டான்--களிவந்த சித்தமுறத்தன்பெயரேகேளாச்செவியனுக்கு முத்தியளித்தானோர்முதல், | (38) |
சேதிப்பதாமொருவன்செய்தொழிலுமேனையவற் காதிப்புவனமவைகாவல்--கோதற்ற நற்குணத்தெம்பூமகள்கோனாரணனந்தாமத்தான் முற்குணத்தானேயெம்முதல், | (39) |
என்றாய்ந்துணர்ந்துணர்த்தியிங்கெமையீடேற்றினான் பொன்றாதசெஞ்சொற்புலவீர்கா--ளொன்றாய தேவின்புறத்தமிழ்செய்தென்குருகூரன்மனம்போல் வாவுஞ்சிறையோதிமன். | (40) |
|