பக்கம் எண் :

112 பாசவதைப் பரணி

734.

ஆற்றுகின்ற விருவினையை யாதியவெம் பாசங்கள்
      அனைத்துந் தீர
மாற்றுமெங்கள் சிவஞான தேசிகனார் திருக்கருணை
      வாழி வாழி.

(58)
   

735.

எல்லையிலா வானந்த மெமக்கருள வெழுந்தருளி
      இடர்தீர்த் தாள
வல்லபிரான் சிவஞான தேசிகனார் திருத்தொண்டர்
      வாழி வாழி.

(59)
   

736.

உளம்பெருகுந் திருக்கருணைச் சிவஞான தேசிகனார்
      உவந்து வாழும்
வளம்பெருகுந் திருக்காஞ்சி மயிலைசெய்கை யுடன்பொம்மை
      வாழி வாழி.

(60)
  

737.

துதித்தருளு மிமையவரு மானிடரு முனிவரரும்
      தொழுது போற்றி
மதித்தருளுஞ் சிவஞான தேசிகனார் வீரசைவம்
      வாழி வாழி.

(61)
 பாசவதைப் பரணி

 முற்றிற்று.

 
   
 ----

 

736. மயிலை - மயிலம். செய்கை - செய்யூர். பொம்மை - பொம்மைய பாளையம்.