724. | வானந்த மண்முத னாமேயாய் மற்றொன் றிலாவகை யுற்றென்றும் ஆனந்த மாகின்ற வாபாடி ஆர்த்தெழுந் தார்த்தெழுந் தாடீரே. | (48) |
| | |
725. | விரவியிவ் வண்ணங்கள் பாடிப்பாடி விழுந்து மெழுந்தும் வியந்துமாடிப் பரவி வருங்கண மானவெல்லாம் பல்வகை யாக நடஞ்செயுமே. | (49) |
| வேறு | |
726. | பொய்யகல மெய்யருளும் பூரணசின் மயமான ஐயனடி யடித்தொழும்பு மாயிரநூ றாயிரமே. | (50) |
| | |
727. | கமலனார் முதலிமையோர் காணாதிங் கெழுந்தருளும் அமலனா ரதிசயமு மாயிரநூ றாயிரமே. | (51) |
| |
728. | என்புருக மயிர்பொடிப்ப விருவிழியும் புனல்சோர அன்புருவிற் றுதிப்பனவு மாயிரநூ றாயிரமே. | (52) |
| | |
729. | தெருள்பெருகுஞ் சிவஞான தேசிகனார் திருவடிக்கீழ் அருள்பெருகும் பத்திமையு மாயிரநூ றாயிரமே. | (53) |
| | |
730. | மண்ணுலகத் தெழுந்தருளி மானிடனா யெமையாண்ட் அண்ணல்திரு நோக்கருளு மாயிரநூ றாயிரமே. | (54) |
| | |
731. | செழிக்கின்ற கழிபாசஞ் சிதைந்தொழியத் திருவருளால் அழிக்கின்ற வாற்றலுந்தா மாயிரநூ றாயிரமே. | (55) |
| | |
732. | தஞ்சமென வருமடியார் தம்பிறவி தீர்த்தருளி அஞ்சலென வருள்வனவு மாயிரநூ றாயிரமே. | (56) |
| வாழ்த்து | |
| வேறு | |
733. | சந்ததமு முலகுய்யத் தமதடியார் தழைத்தோங்கத் தரணி மீது வந்தருளுஞ் சிவஞான தேசிகனார் பதகமலம் வாழி வாழி. | (56) |
725. கணம் - பேய்.
733. பி - ம். ‘தேசிகனார் திருக்கருணை வாழி வாழி’