பக்கம் எண் :

110 பாசவதைப் பரணி

718.

திரித்த சதுரினைப் பாடீரே
      செப்பிய தொன்றெனப் பாடீரே
விரித்த வருளினைப் பாடீரே
      மேலுக்கு மேலினைப் பாடீரே.

(42)
   

719.

ஞான வினோதனைப் பாடீரே
      நாட்ட வருளினைப் பாடீரே
ஈனமி லாநெறி பாடீரே
      இன்பச் சலதியைப் பாடீரே.

(43)
    

720.

கொண்டா னெனையென்று பாடீரே
      கொடுத்தான் றனையென்று பாடீரே
உண்டா னுயிரென்று பாடீரே
      உவட்டாக் கருணையைப் பாடீரே.

(44)
   

721.

புரவெனக் காக வெழுந்தருளிப்
      பொன்னடி சூட்டப் புவிகள்கயிற்
றரவெனப் போனமை பாடீரே
      ஆனந்த ரூபனைப் பாடீரே.

(45)
  

722.

தேரி னடந்திட னிற்றலிவை
      தீர்ந்து நிறைந்த செழுஞ்சுடரிப்
பாரி னடந்தமை பாடீரே
      பாச விமோசனைப் பாடீரே.

(46)
   

723.

புற்புதம் போன்றழி யாக்கைதனைப்
      பொருளென் றுணர்ந்த பொறியிலிக்கும்
அற்புதந் தந்துவந் தாண்டருளும்
      ஐயனைப் பாடீர் பாடீரே.

(47)

718-9. “மீட்ட விரகினைப் பாடீரே விளம்பிய தொன்றென்று பாடீரே, நாட்ட வருளினைப் பாடீரே ஞான வினோதனைப் பாடீரே” அஞ்ஞ.

720. “தந்ததன் றுன்னைக் கொண்டதென் றன்னைச் சங்கரா வார் கொலோ சதுரர்” (திருவா. ), “என்னை யொழித்தமை பாடீரே யென்னுயி ருண்டமை பாடீரே, தன்னை யளித்தமை பாடீரே தத்துவ நாதனைப்பாடீரே” அஞ்ஞ.

721. புரவு - காப்பாற்றுதல்.

722. தேரின் - ஆராய்ந்தால்.

723. புற்புதம் - நீர்க்குமிழி. அற்புதம் - ஞானம்.