712. | எழுதும் பிடகம் பலபிதற்றி இன்ப முத்தி கந்தமைந்தும் முழுதுங் கெட்டுப் பெறவி்ருக்கும் முழுப்பேய் தனக்கும் வாரீரே. | (36) | | | | 713. | தெளியு முறைமை யுணராது தீது நன்றுந் தெரியாது விளியு முடலை நானென்னும் வெறும்பேய் தனக்கும் வாரீரே. | (37) | | | 714. | ஒளிக்கு மொளியார் காணுமிடத் துணரும் பழியாந் திறமுணர்ந்தும் களிக்கும் வாமப் பேய்வந்தாற் கதறக் கதற வடியீரே. | (38) | | | 715. | இன்னு மின்ன நிலையெய்தி இளைத்தே னென்ன விரங்கிவரு மன்னு நிலைகண் டெவற்றினுக்கும் வயிறு நிறைய வாரீரே. | (39) | | வேறு | 716. | ஆரணன்பரவு மாதிதன்கருணை யாலடங்கலு மறிந்தபின் பூரணன்பத யுகங்கள்வந்தனை புரிந்துசொல்வர்பல புகழ்களே. | (40) | | பேய்கள் கூழுண்டு பாடுதல் | | வேறு | | 717. | ஒருவடி வைத்தம தேயாக உற்றுல கெய்தியெ முச்சிமிசை திருவடி வைத்தமை பாடீரே தெவிட்டாக் கருணையைப் பாடீரே. | (41) |
712. இதிற் குறிப்பிக்கப்பட்டவர்கள் புத்தர்கள். 714. களிக்கும் - கள்ளைக் குடித்து மகிழும். 717. பி - ம். ‘எழுச்சிமேல்’ |