பக்கம் எண் :

6. தேவியைப் பாடியது 33

185.

பொன்மாலை பூமாலை புறக்கணித்துத் தன்னடியார்
சொன்மாலை யெப்போதுஞ் சூடுவது திருவுள்ளம்.

(15)
   

186.

கேசாதி பாதாந்த மணியணிகள் கிளரருளால்
ஏசாத ஞாதாதி யொருமூன்று மின்னமுதால்.

(16)
  

187.

பண்ணேழுங் கர்ணாவ தங்கிசமோ பராபரைக்கு
மண்ணேழு மணிமுன்கை வால்வளையோ மதித்திலனால்.

(17)
   

188.

மலையேழுங் கந்துகமோ மணிக்கழங்கோ வம்மனையோ
அலையேழு திருநதியு மாரமோ வறிந்திலனால்.

(18)
   

189.

அண்டபகி ரண்டமெலா மவள்காதிற் குதம்பையதோ
கொண்டபடி கோத்தணியுங் கோவையோ குறித்திலனால்.

(19)
   

190.

பொழிலேழும் விளையாடிப் பூக்கொய்யு மிளங்காவோ
எழிலேழு பாதலமு மெரிமணிப்பூண் பெட்டகமோ.

(20)
   

191.

புவனங்க ளோமாதி புரிந்தபிடே கிப்பவைக்கும்
தவனங்க ளோவன்னை தானடுக்கும் பழங்கலமோ.

(21)
   

192.

வேதங்க ளொருநான்கு மெல்லடிமேல் வியன்சிலம்போ
நாதங்க ளொருநான்கு நகுகதிர்வண் சதங்கைகளோ.

(22)
   

193.

மிருதிபுரா ணஞ்சடங்கம் வீறுமெண்ணெண் கலையாதி
ஒருதிசிலம் பொடுசதங்கைக் கொள்ளரியோ வுணர்ந்திலனால்.

(23)

185. “சாத்தும்பூ மாலையினுந் தமையுணர்ந்த மெய்யடியார், ஏத் தும்பா மாலையிலே யெப்போதுந் திருவுளமே” அஞ்ஞவதைப்.

186. ஞாதாதி மூன்று - ஞாதா, ஞானம், ஞேயம் ;  அறிபவன், அறிவு, அறியப்படுவது. “பாதாதி கேசாந்த முவந்தணியும் பணியருளே, ஞாதாதி யாமூன்று முவந்தயிலு நல்லமுதே” அஞ்ஞவதைப்.

187. கர்ணாவதங்கிசம் - செவிப்பூ ;  “பண்ணேழுங் கன்னாவ தங்கிசமோ” குலோத். உலா.

188. கந்துகம் - பந்து. மலை கந்துகம் :  “காவன் மலையேழுங் கந்துகமோ” (குலோத். உலா. ) நதி ஆரம் :  “ஆர்க்கு நதியேழு மாரமோ” குலோத். உலா.

191. ஓமாதி - ஹோமம் முதலியன. தவனங்கள் - ஸ்நபனகலசங்கள்.

பி - ம். ‘புவனங்களேயாதி’

192. வேதம் சிலம்பு  :  “அடிச் சூட்டு நூபுரமோ வாரணங்க ளனைத்துமே” தக்கயாகப்பரணி, 119.

193. மிருதி - வேதம். சடங்கம் - சாஸ்திரங்கள் ஆறு. ஒருதி - ஒருத்தி ;  தொகுத்தல். அரி - சிலம்பின் உள்ளிடும் பரல்.