பக்கம் எண் :

32 பாசவதைப் பரணி

178.

அவஞான கற்பனையே யல்லதுபே ரில்லென்கோ
சிவஞான தேசிகனாந் திருநாமம் பரவியுமே.

(8)
   

179.

இணையிலா விணைப்பதத்திற் கெல்லையில்லை யேயென்கோ
புணையிலா நாயினேன் புன்றலைமீ திருப்பவுமே.

(9)
 

வேறு

180.

முடிவிலாம னின்றதம்ம முடியதென்ன மொழிவனே
ஒடிவிலாம லென்மனத்தி னுள்ளடங்க லுற்றுமே.

(10)
   

181.

திசையினீள மன்றிவேறு சேலையில்லை யென்பனே
நசையின்மேவி யென்னகத்தி னடுவணுற் றிருந்துமே.

(11)
 

வேறு

 

182.

தாயாகித் தாதையுமாய்த் தலையளிசெய் தெமையாண்ட
தூயாடன் றிருவுருவஞ் சொல்லுபவோ சொல்லுபவோ.

(12)
 

அமளி முதலியன

 

183.

போதத்தின் வழிநின்றார் புந்தியோ புறங்காடோ
வேதத்தின் மத்தகமோ விடவரவோ மெல்லமளி.

(13)
   

184.

என்பாவு மாறுகட லேழிருந்து மென்னன்னை
அன்பாளர் கண்ணருவி யாடுவது திருவுள்ளம்.

(14)

178. பி - ம். ‘பேறில்’

179. “தொல்லையாகி நின்றதுய்ய துணைமலர்ப்ப தங்களுக், கெல்லையான தில்லையோவென் னுச்சிமீ திருக்கவே” அஞ்ஞவதைப்.

180. “விளம்புமெப் பொருட்குமேன் மிகுத்தநீண் முடிப்பரப், புளம் புகுந்தி ருக்கவெல்லை யுன்னவில்லை யென்னவோ” அஞ்ஞவதைப்.

181. “அடையமா திரம்படைத்த வப்புறம் புடுப்பதோர், உடையு மில்லை யென்னவோவென் னுள்ளடங்க லுற்றுமே” அஞ்ஞவதைப்.

பி - ம். ‘செல்வ மில்லை’, ‘செலவுமில்லை’

182. தலையளி - சிறந்த அன்பு. “அன்னையாகி யத்தனாகி யஞ்சலஞ்ச லென்றுவந், தென்னையாளுங் கோலநீர்மை யென்னதா வியம்பவே” அஞ்ஞவதைப்.

183. போதம் - அறிவு. மத்தகம் - உச்சி.

“மரசுணமோ மறைத்தலையோ மயானமோ வாக்கிறந்த, தேசுணர்ந்த மெய்யடியார் சிந்தையோ திருந்தமளி” அஞ்ஞவதைப்.

184. என் - என்ன ஆச்சரியம். பாவும் - பரவிய. ஆறுகளும் ஏழு கடல்களும். “ஒன்பதுதீர்த் தமுமன்பர் தம்பாதம் விளக்கியநீர்க் கொவ்வா வென்றே, அன்பர்கடங் கண்ணீர்கொண் டம்மைக்கு மஞ்சனநீ ராட்டுவார்கள்” மோகவதைப்.