| பரிசனம் | | 201. | தெரிசனத்தின் முறைமையருள் தேவிபணி விடைபூண்ட பரிசனத்தின் பரிசதனைப் பகுத்தினிநாம் பகருதுமே. | (31) | | | | 202. | மாலாய போதமற வடிவோவ யோகமுற மேலாய யோகினவர் வீரிபயி ரவர்களே. | (32) | | | 203. | செறியுமா றிந்திரிய முதலாய பொருளுண்மை அறியுமா றறிபவர்க ளமலையோ கினிகளே. | (33) | | வேறு | | 204. | உடலெலாம் விழியதா யுறுமவர்க் கருள் செய்வார் உதயமத் தமனமற் றொளிர்கதிர்க் குவமையார் கடலுலா வியதிரைப் பிறவிகெட் டிலகுவார் காளிமா காளிகங் காளியோ கினிகளே. | (34) | | | | 205. | நிலையிலா தனவெலா நிலையெனக் கருதிடார் நிலையினைக் கருதிநித் திரையறத் துயில்செய்வார் கலையெலா மடையினுங் கந்தைகோ வணவரே காளிமா காளிகங் காளியோ கினிகளே. | (35) | | | | 206. | ஒட்டுவிட் டுணர்வுவிட் டுரையும்விட் டுலகுவிட் டூசலா டுவதுவிட் டுறுபெரும் பிறவியின் கட்டுவிட் டருணிலைக் கட்டுநிற் பவர்களே காளிமா காளிகங் காளியோ கினிகளே. | (36) | | | | 207. | தகையுமா யோததிக் கரைகடந் தணையுமே சகலவாழ் வையுமிந்த்ர சாலமென் றுணருமே பகையுமார் வமுமிழந் துவகைபெற் றுயருமே பரைபுரா தனிமனோன் மணிபதா கினிகளே. | (37) |
201. பணிவிடை - குற்றேவல். பரிசனம் - பரிவாரம். 202. “புரம யோகமுறு பேதமறு போத முடனே, பரம யோகமுறு வாரிறைவி பயிரவர்களே” அஞ்ஞவதைப். பி - ம். ‘யோகினிவர்’ 203. “புணரு மைத்ரிமுத லானபொரு ளுள்ளபரிசே, உணரு மார்க்கம் வரு மாதவர்கள் யோகினிகளே” அஞ்ஞவதைப். 204. “அவர்களா கமுமெலாம் விழியதா மொழிவரே, எழுதன்மா றுதலிலா விரவியா முருவரே” அஞ்ஞவதைப். 205. கலை......... கோவணவரே : “கலைபொ றாமலொரு கோவணவ ராய்விடுவரே” அஞ்ஞவதைப். 206. ஒட்டு - பற்று. 207. தகையும் - துன்பஞ்செய்யும். மாயோததி - மாயையாகிய கடல். |