பக்கம் எண் :

36 பாசவதைப் பரணி

 

வேறு

 
208.

தம்மை நாடித் தலைவனை நாடுமே
      தலைவன் சீர்த்தி தலைபுனைந் தாடுமே
எம்மை யாள்கென் றிரந்திசை பாடுமே
      இறைவி யைத்தொழும் டாகினி வர்க்கமே.

(38)
   

209.

அருவி யானந்த வெள்ளம் படியுமே
      ஆடு கின்ற தருளும் பொடியுமே
இருமை யுந்துறந் தேமாந் திருக்குமே
      இறைவி யைத்தொழும் டாகினி வர்க்கமே.

(39)
  

210.

அண்ட மோரணு வாகக் குறுகுமே
      அணுவு மண்டம தாகப் பெருகுமே
எண்டி சாமுக முஞ்சென் றுலாவுமே
      இறைவி யைத்தொழும் டாகினி வர்க்கமே.

(40)
 

வேறு

 

211.

சொல்லரிய நனவினொடு துயின்மறந் தவர்களே
      தூங்குதனி நிட்டைவிடு தொழில்சிறந் தவர்களே
நல்லதொரு ஞானமுத் திரைதழைத் தவர்களே
      ஞானநா யகிகருணை நாடுசா தகர்களே.

(41)
 

வேறு

 

212.

பிறிவி றந்தசுக வாரிதி யழுந்திடுவரே
      பிரியம் வந்துபலி யங்கையி னயின்றமைவரே
அறிவி றந்துரை யிறந்திட முணர்ந்திடுவரே
      அமலை யம்பிகை யணங்குடை யகம்படியரே.

(42)

210. “அவனிவா னடையவோ ரணுவதா நெடியரே, அணுவுமே ருகிரியா யறவுநே ரியர்களே, பவனிவா னடையவோர் பவனிபோ துவர்களே” அஞ்ஞவதைப்.

211. “நித்ரை சாகரத மற்றதொரு நீர்மையினரே நிட்டை யாதுமில தானதொரு நீதியினரே, முத்ரை ஞானமெனு முத்ரையல தேதுமிலரே முத்தி நாயகர்க ளானபவ மோசகர்களே.” அஞ்ஞவதைப்.

பி - ம். ‘ஞான முற்றிசை தழைத்தவர்களே’

212. உரையிறந்திடம் - உரை இறந்த இடம்.