218. | வெந்தி றற்கொடிய சூலமொடு பாசம்விசிறா மேதி யூர்திமிசை வெங்கதை சுழற்றிவெகுளா வந்த வந்தக னடுங்கிவிழ மோதிவெருவேல் மாம றைச்சிறுவ வென்றருள் பொழிந்தவளமும். | (48) | | | | 219. | வேத னாரணனொ டாரணமு மின்னமுணரா மிக்க பாதயுக ளந்தரணி தோயவிரவிற் றூத னாகியிரு காலொரு மடந்தையிசையத் தொண்ட ரேவல்தலை கொண்டருள் சுரந்தபரிசும். | (49) | | | 220. | முன்பு பின்பினொடி லாததொரு மூலவொளிபால் முற்றி யுற்றழிவி லாதொரு திறத்தினுருகும் அன்பு கொண்டக நெகிழ்ந்தணி வளர்க்கநினையும் அம்ம வைக்கருள் தருங்குழவி யானபரிசும். | (50) | | | | 221. | மேன்மை யுற்றசிவ ஞானதே சிகனிவனெனும் மிக்க நாமமொடு மேதினி தழைக்குமுறையால் மானி டப்புதிய கஞ்சுக மணிந்துதமிழ்தேர் மயிலை மால்வரை வளம்பெருக வந்தபரிசும். | (51) | | வேறு | | 222. | ஒருமூர்த்த மெனவுணராப் பரப்பிரமந் தனினின்றும் உபதே சிப்பக் குருமூர்த்த மெனவெய்தி மான்மழுவுங் கரந்ததிருக் கோலம் போற்றி. | (52) |
218. மேதியூர்தி - எருமைக்கடா வாகனம். அந்தகன் - யமன். மறைச் சிறுவன் - மார்க்கண்டேயர். 219. பாதயுகளம் - இரண்டு தாள்கள். ஒருமடந்தை - பரவையார். தொண்டர் - சுந்தரமூர்த்தி நாயனார். 220. அம்மவை - சிவஞான பாலைய தேசிகரை வளர்த்த தாய் ; “பெருகுமம் மவைவளர்க் குங்குழவி செங்கீரை யாடியருளே.” சிவஞான. பிள்ளைத். 221. கஞ்சுகம் - சட்டை. மயிலைமால்வரை - மயூராசலம் ; இப்பொழுது மயிலம் என்று வழங்கும் ஸ்தலம். |