பக்கம் எண் :

6. தேவியைப் பாடியது 39

223.

எண்ணாத வினைமுழுது மிரவிவர விரியுமிருள்
      எனவே சாயக்
கண்ணாலே கடைக்கணித்துக் கழிபிறவி கெடுத்தபெரும்
      கருணை வாழ்த்தி.

(53)
   

224.

எங்கள்பிரான் சிவஞான தேசிகனார் திருக்கருணை
      என்று மேத்தி
அங்கமெலாம் புளகரும்ப வானந்தச் சலதிபடிந்
      தழுந்து வாரே.

(54)
  

223. இரியும் - நீங்கும்.

பயிரவர்கள் (202) முதலியவர்கள் (212) பரிசு (213) முதலியவைகளை (221)ப் போற்றி (222) வாழ்த்தி (223) அழுந்துவாரே (224) என இயைக்க.