7. பேய் முறைப்பாடு 225. | இறப்பதும் பிறப்புமாய விந்த்ரசால வித்தையைச் சிறப்பொடுங் குறிக்கொளென்று தேவிமுன்பு காட்டியே. | (1) | | | | 226. | எங்கணாய கிக்குமுன்ன ரெய்திவாய் புதைத்துநேர் தங்கடங்கள் குறைகள்கூளி தாமெடுத்தி யம்புமே. | (2) | | | 227. | பிறந்திறந்து திரிதிரென்று பேய்களாக வெங்களை மறந்திருந்து நெஞ்சினால் வகுத்ததென்னை யன்னையே. | (3) | | வேறு | | 228. | மாயிருந்தண் கடலுலகத் துமையாள் பாகர் மாணிக்க வாசகரே முதலாந் தொண்டர் ஆயிரம்பேர்க் களித்தவிடத் தெங்கள் கூட்டம் அங்கணுகப் பொறுத்தாரோ வவர்க்கே செய்தார். | (4) | | | | 229. | நிறைத்தபெரும் புகழ்க்காழிப் பிள்ளை யார்க்கு நெடுந்தடத்துப் புகுந்தழுகை நீக்கி நீதான் துறைத்தமிழு முனதுமுகிழ் முலைத்தீம் பாலும் சுரந்தளித்தா யெங்களுக்கோர் துளிதந் தாயோ. | (5) | | | | 230. | பொங்கருளா ரமுதத்தை வாகீ சர்க்குப் புனிற்றிளவான் பிறைக்கண்ணிப் புனித ரீந்தார் எங்களையு மழைத்தாரே லன்றே யுய்வோம் எம்மையவர் மறத்தலினா லேக்கற் றோமால். | (6) |
227. “உலகிலே சனித்துநின் றுழைத்துநீர் பிழைப்பிலா, அலகையாமி னெனவகுத்த தென்கொலெம்மை யம்மையே” அஞ்ஞவதைப். 228. “வாசகத்தா லாவியைநின் றுருக்கு ஞான மதயானை வாதவூர் வள்ள லோடு, மாசகற்றி யாயிரம்பேர்க் கீச னார்நல் லமிர்தளித்தா ரெமக்கிரங்கி யருளா ரிந்நாள்” அஞ்ஞவதைப். 229. காழிப் பிள்ளையார் - திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார். “தலைப்பான்மை மிகப்பெரிய காழி ஞான சம்பந்தர் தாம்பிள்ளைத் தனத்தி னாலே, முலைப்பாலைப் பகிராதே தாமே யுண்டு முத்தமிழைப் பாடியற முதிய ரானார்” அஞ்ஞவதைப். 230. வாகீசர் - திருநாவுக்கரசு நாயனார். “திருநாவிற் கரசர்மிகத் தெள்ளத் தேறித் தெளிந் துதித் திக்குமருட் டேறன் முன்ன, மொருநாளிற் பெற்றெம்மை யொழியப் போயுண் டொளி யுருவா னார்யாங்க ளுலர்ந்தே போனேம்” அஞ்ஞவதைப். |