231. | ஆரூரர் தமையாட்கொண் டுலவா வின்பம் அவர்க்கருளித் தம்மருகே யடைந்து வாழப் பாரூருந் தொழப்பணித்தா ரந்த நாளும் பார்த்திருந்து பெரும்பசியாற் பதைத்தோ மம்மே. | (7) | | | | 232. | கோட்டிளந்தண் பிறைக்கண்ணிப் புனித னார்தாம் கூடலசங் கமத்தருளுங் குருவாய் வந்தே ஈட்டருஞ்சீர் வசவேசர்க் கமுத மீந்தார் யாங்களே யந்நாளு மிளைத்தோ மம்மே. | (8) | | | 233. | கவலையற்று நிரதிசய வமுத முண்டு களித்திறுமாந் திருப்பமுக்கட் கடவு ளார்தாம் குவலயத்தி லருள்செய்தா ரநேகம் பேர்க்குக் கோமளையே யெம்மளவுங் கொடிய ரானார். | (9) | | வேறு | | 234. | ஏழ்வயிற்றுப் பிறப்பெல்லா மெங்களுக்கே யுரித்தாக்கிப் பாழ்வயிற்றுக் கிரைதேடிப் பதைபதைக்கப் படைத்தனையே. | (10) | | | | 235. | மையாக விருட்டறைக்குண் மாயாப்ர பஞ்சமெல்லாம் மெய்யாக மதித்துறைய வினையேமை விதித்தனையே. | (11) | | | | 236. | சென்றவிடத் தைம்புலனுஞ் செலவிடுத லல்லாமல் நின்றவிடத் தேயுன்னை நினைந்திருக்க நினைந்திலையே.. | (12) | | | | 237. | மண்ணாசை பொன்னாசை மழைத்தடங்கண் வலைவீசும் பெண்ணாசைக் கடலழுந்திப் பிரியாமற் பிரித்தனையே. | (13) |
231. “அடுத்தனவே செய்துதிரிந் தற்ற நம்பி யாரூரிற் கிறைவர்திரு வருளி னாலே, தடுத்தவரை யாட்கொண்டா ரமிர்த முண்ணத் தாமளித்தா ரெம்மளவுந் தாயே காணேம்” அஞ்ஞவதைப். 232. கோடு - பக்கம். வசவ தேவருக்குக் கூடல சங்கமேசர் குருவாக வந்து அருள் செய்தார் ; “தாடலை தந்திங் கெம்மையா ணந்தி தாயகட் டினுநின்று தரைமேல், ஏடவிழ் மலர்வாண் முகமது தோன்ற வெழுந்தரு ளுதன்முனங் குருவாய்க், கூடல சங்க மேசன்றாய்க் கொளித்துக் குறுகிநன் னுதலினி றணிந்து, வீடருள் பரம சிற்கன லிங்க மெய்யுறத் தரித்தனனம்மா?” பிரபு. அக்கமாதேவி. 25. 234. உரித்து : பன்மையில் ஒருமை வந்த வழுவமைதி ; பிறவாறும் கூறுவர். 235. பி - ம். ‘வினையெம்மை’ 236. “சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ, நன்றின்பா லுய்ப்ப தறிவு” குறள், 422. |