பக்கம் எண் :

42 பாசவதைப் பரணி

 

கனவு

 
238.

இவ்வண்ணம் பலகூளி யெடுத்தியம்பச் சிலகூளி
மெய்வண்ணம் விளைந்தகுறி விமலைதனக் குரைசெயுமால்.

(14)
   

239.

ஓரி எண்டிசைமா நிலவரைப்பி னினிதிலங்குஞ் சராசரமாய்க்
கண்டபொரு ளத்தனையுங் கனவாகக் கண்டனனே.

(15)
  

240.

ஆதியுமந் தமுமறியே னறிவதொரு குறியல்லாற்
றீதகலும் படிவந்து சேர்ந்தகுறி யொன்றுளதே.

(16)
   

241.

மாயமிது வெனவுணரா மயக்கத்திற் குடிபுக்க
காயம்விடுத் துயிர்நீங்கக் கண்டுமனங் கலங்கியதே.

(17)
   

242.

சொல்லாத பெருந்தகைமைச் சுவர்க்காதி போகமெல்லாம்
நில்லாத நிலையென்று நிச்சயமாய்த் தோன்றியதே.

(18)
   

243.

தாவாத சமதமங்கண் முதலகுணந் தலைப்படுமே
மேவாயா னெனதென்னும் வெறுஞ்செருக்கு விடைகொளுமே.

(19)
   

244.

பழிகாட்டு மிருவினைக்கும் பரிபாகம் வந்தெய்த
வழிகாட்டுங் குருவிருந்த வழிதேடி மனஞ்செலுமால்.

(20)
   

245.

விழிநீரு மயிர்ப்புளகு மெய்விதிர்ப்புந் தனிதோன்றப்
பழியாத குறியிவைதாம் பலித்ததுபண் டறியேமால்.

(21)
   

246.

தெருள்புகுந்த வடியர்சிலர் சிறப்பிவையென் றுரைத்தனரே
மருள்புகுந்த சிலவலகை மதியாது மயங்கினவே.

(22)
   

247.

இவ்வண்ணம் பலகூறி யிறையவடன் றிருப்பாதச்
செவ்வண்ண மலர்சூடித் தெருமரா நின்றிடலும்.

(23)
   

248.

தெருள்பெருகுஞ் சிவஞான தேசிகனாம் புகழ்வேந்தன்
பொருகளங்கண் டோரலகை யவணின்றும் புகுந்ததுவே.

(24)
   

249.

புகுந்தகடி கடிதுமிகப் புடைபுடைத்து வாய்திறவா
மிகுந்தபர பரப்பினொடும் விளித்தழையா நின்றதுவே.

(25)

238. குறி - நிமித்தம்.

243. சமதமங்கள் முதல குணம் - சமம், தமம், உபரதி, திதீட்சை, சமாதானம், சிரத்தை என்பன ;  இவை சமாதி ஷட்சம்பத்தி எனப்படும். யான் எனது என்னும் செருக்கு - அகங்கார மமகாரங்கள் ;  “யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க், குயர்ந்த வுலகம் புகும்” குறள்.

245. விதிர்ப்பு - நடுக்கம்.

246. தெருள் - தெளிவு. அலகை - பேய்.

249. கடி - பேய்.