| வந்த பேயின் கூற்று | | | வேறு | | 250. | அணங்கு பிறவி யொழிய அணங்கு பிறவி யொழிய கணங்க ளெழுக வெழுக கணங்க ளெழுக வெழுக. | (26) | | | | 251. | மாய வவல மழிய மாய வவல மழிய பேய்க ளெழுக வெழுக பேய்க ளெழுக வெழுக. | (27) | | | 252. | மீளி வினைகள் கழிய மீளி வினைகள் கழிய கூளி யெழுக வெழுக கூளி யெழுக வெழுக. | (28) | | வேறு | | 253. | வல்லைபுக நீவிரெல்லா மாயாத வப்பசியை மாற்ற வென்னாச் சொல்லவமர் விளைந்தபடி சொல்லுகநீ யெனச்சிலபேய் சொல்ல லோடும். | (29) | | வேறு | | 254. | ஆராம லுலர்ந்தவுட றன்னை விட்டங் கப்புறமே குப்புறவுற் றகன்றெம் மாவி சோராம லெமையளித்துப் பார்க்கும் வண்ணம் சொல்லெனச்சில் பேய்க்குதடு துடித்த வன்றே. | (30) | | வேறு | | 255. | பணிவுபடச் சிலமுதுபேய் படபடத்துக் கூறாமற் பையப் பையத் துணிவுபடச் சமர்விளைந்த படியெல்லாஞ் சொல்லுகெனச் சொல்லு மன்றே. | (31) |
250. அணங்கு பிறவி - வருத்துகின்ற பிறப்பு. ஒழிய : வியங்கோள். 251. அவலம் - துன்பம். அழிய : வியங்கோள். 254. பி - ம். ‘அப்புறமே பெயர்பெறவுற்’ 255. பையப் பைய - மெல்ல மெல்ல. |