256. | இன்னந்தா னையப்பா டோகெடுவீ ரஞ்ஞனெனும் மிகல்கூர் பாச மன்னன்றா னழிந்ததுபார் வந்ததுதற் பதப்பொருளின் வடிவே காணும். | (32) | | | | 257. | கவலைபோங் கடும்பசிபோங் கன்மம்போங் கருவழலிற் காயுந் துன்பச் சவலைபோம் பொருகளநீர் சார்ந்தவொரு தினைப்போதிற் சரத மீதால். | (33) | | | 258. | அலகிலாப் பல்லூழி யனந்தசத கோடியண்டத் தவர்க ளெல்லாம் உலைவிலா துண்டாலு முண்ணவுண்ணத் தொலையாதால் உரைப்ப தேயோ. | (34) | | | | 259. | காருண்ட கண்டனுண்டெ னயனுண்டெ னுலகுண்ட கண்ண னுண்டென் ஆருண்டெ னாரொழிந்தெ னருகாது பெருகாதோர் அளவைத் தாமால். | (35) | | வேறு | | 260. | இன்னவாறு சொற்றலோடு மிறைவிபாத பங்கயம் அன்னவாறு போற்றிவாழ்த்தி யலகையாவு மணுகியே. | (36) | | | | 261. | உளவுசொன்ன பேயின்வாயை யோடிமுத்த முண்ணுமே களவுசொன்ன பேய்களைக் கனன்றுநின்று சீறுமே. | (37) | | | | 262. | துணிவுசொன்ன மறைகளைத் துதித்துநின் றுவக்குமே தணிவுசொன்ன பேய்களைத் தகர்க்கபற்க ளென்னுமே. | (38) |
256. “ஐயப்பா டோகெடுவீ ரஞ்ஞனழிந் தமையின்னம், வையத்தே வந்ததுநான் மறைதேடும் பொருள்காணும்” அஞ்ஞவதைப். 257. “பசியும்போ முங்கள்பெரும் பாவமும்போ மிப்பத்துத், திசையும் போய் முடிந்தபடு களத்தினொரு தினைத்துணையில்” (அஞ்ஞவதைப். ) சவலை : “சவலையான தாபசோப தளர்வு” 264. 258. “பல்லாயி ரத்தாண்டு பலகோடி யண்டத்தார், எல்லாரு முண் டாலு மித்தனையுங் குறையாதே” அஞ்ஞவதைப். 259. “பாருண்ட மாலுண்டென் படைப்பவனோ டானுண்டென், ஆருண்டெ னாரொழிந்தெ னருகாது பெருகாது” அஞ்ஞவதைப். 261. “மொழிந்தவாயை யோடிவந்து முத்தமுண்டு நிற்குமே” அஞ்ஞவதைப். 262. “தொல்லையுள்ள பரிசுசொன்ன சுருதியைக்கொ டாடுமே, இல்லை யென்ற பேயின்வாயி னெரியைவையு மென்னுமே” அஞ்ஞவதைப். |