294. | தான மில்லை தவமில்லை வண்புகழ் தானு மில்லை தருமமு மில்லையால் மான மில்லை மடவார்தங் கற்பிலை மற்று மொன்றில்லை மாத்தா னொழுக்கமே. | (27) | | | | 295. | நடலை வாழ்க்கை நிலையா நயப்புற நாட லின்றி நலங்கொள் படிவமும் முடலை யாக்கைய தாக வியப்புற மூக நீதி முடிய மொழியுமால். | (28) | | | 296. | நீதி யற்றமை தன்னை நினைப்புற நெடிய மூவுல கத்து நிரல்பட ஓதி மற்றவர்க் கித்துணை யாயினும் உணர்த்த வல்லா ரொருவரு மில்லையால். | (29) | | | | 297. | வழுவி நின்று மயங்கி மயங்கிவாய் மாறி வைகலு மாறா வரும்பவம் தழுவி நின்று தரணியு ளோர்படும் தாழ்வு தம்பிரான் றானே யறியுமால். | (30) | | சிவஞான தேசிகர் அவதரித்தல் | | 298. | பாச வஞ்ஞன் பழிமா சுலகெலாம் படர்ந்து மூடும் பரிசு பரானந்தத் தேசு பெற்றுய ருங்கரு ணாலயன் திருவு ளந்தனிற் சென்றேறி விட்டதால். | (31) | | வேறு | | 299. | மற்ற வஞ்ஞன் மடியத்தன் பேரருள் முற்று மோர்வடி வாகி முதல்வனே. | (32) |
294. வண் புகழ் - கொடுத்தலால் உண்டாகும் புகழ். மா - விலங்கு. “அற்பு மில்லை யருந்தவ மாதரார், கற்பு மில்லை கழிந்தா னொழுக்கமே” அஞ்ஞவதைப். 295. நடலை வாழ்க்கை : “நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர்” (திருநா. தே. ) மூக நீதி : “மூகநீதி முடிய மொழிவதே” அஞ்ஞவதைப். 296. “முறையை யற்றமை மூவுல கத்தினும், இறைய வர்க்கறி விப்பாரு மில்லையே” அஞ்ஞவதைப். பி - ம். ‘நிரம்பட’ 299. “தன்பே ரருண்முற்றுந் தானோர் வடிவாயே” அஞ்ஞவதைப். |